தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உஜ்ஜயினியில் உள்ள மகாகாலேஷ்வர் கோவிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்துள்ளார்.
மத்தியப் பிரதேசத்தில், உஜ்ஜயின் மாவட்டத்தில் அமைத்துள்ளது மகாகாலேஸ்வர் திருக்கோவில். 12 ஜோதிர்லிங்கத் தலங்களில் ஒன்றாக விளங்கும் இந்த திருக்கோவிலில் தரிசனம் செய்ய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று இக்கோவிலுக்குச் சென்றார்.
புகழ்பெற்ற இத்திருத்தலத்தில் தமிழக ஆளுநர் ரவி, தன் மனைவியுடன் இன்று காலையில் நடைபெற்ற பஸ்ம ஆரத்தியில் கலந்துக்கொண்டார்.
இந்தப் புனித திருத்தலத்தில் பஸ்ம ஆரத்தி என்பது ஒரு புகழ்பெற்ற சடங்காகும் மேலும் இந்த சடங்கு அதிகாலை 3 மணிக்கு தொடங்கி 5.30 மணிவரை பிரம்ம முகூர்த்தத்தில் கோவிலில் உள்ள நந்தி மண்டபத்தில் நடைபெறும்.
பஸ்ம ஆரத்தி முடிவடைந்த பிறகு ஆளுநர் ரவி தன் மனைவியுடன் கோவிலின் கருவறைக்கு சென்று சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்து பின்னர் சுவாமி தரிசனம் செய்தார்.
பின்பு மகாகாலேஷ்வர் கோவில் நிர்வாகிகள் குழு தமிழக ஆளுநர் ரவி அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி கெளவுரவித்து, மகாகாலேஷ்வர் சுவாமியின் படத்தைப் பரிசாக வழங்கியது.
மேலும் பல திரைப் பிரபலங்களும், அரசியல் பிரபலங்களும் இக்கோவிலுக்கு வழக்கமாக வருகை தருவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.