மகளிர் மற்றும் பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய 1023 விரைவு சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்படுகிறது
மகளிர் மற்றும் பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய 1023 விரைவு சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்று சட்ட அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Ensuring the safety & security of women and girl child, the Department of Justice is implementing a Centrally Sponsored Scheme, to set up 1023 Fast Track Special Courts (FTSCs) including 389 exclusive POCSO Courts across the nation for expeditious trials relating to Rape & POCSO… pic.twitter.com/b8E5nlxhVy
— Ministry of Law and Justice (@MLJ_GoI) October 17, 2023
பாலியல் வன்கொடுமை மற்றும் போக்சோ சட்ட வழக்குகளை விரைந்து விசாரிப்பதற்காக நாடு முழுவதும் 389 பிரத்யேக போக்சோ நீதிமன்றங்கள் உள்பட 1023 விரைவு சிறப்பு நீதிமன்றங்கள் (எஃப்.டி.எஸ்.சி) அமைக்க மத்திய அரசின் நிதியுதவியின் கீழ், நீதித் துறை ஒரு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது என சட்ட அமைச்சகத்தின் சமூக ஊடக எக்ஸ் தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.