சென்னையில் 20க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
வரி ஏய்ப்பு தொடர்பாக பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடம் இருந்த வருமான வரிதுறைக்கு புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளன. இதனையடுத்து அரசியல்வாதிகள், அதிகாரிகள், அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் அவ்வப்போது சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் சென்னையில் 20க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் இன்று அதிகாலை முதல் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சௌகார்பேட்டையில் மருந்து ஏற்றுமதி இறக்குமதி செய்யும் நிறுவனத்தில் வருமான வரி சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
சவுகார்பேட்டை ஸ்டார்ட்டன் முத்தையா முதலி தெருவில் தொழில் அதிபர் ஒருவர் வீட்டில் ஐ.டி. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர் .வேப்பேரி, பூக்கடை, வில்லிவாக்கம், மாதவரம் உள்ளிட்டமேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.