உலகக்கோப்பை கிரிக்கெட் புள்ளி பட்டியலில் தற்போது முதலிடம் யாருக்கு ?
2023 உலகக்கோப்பை தொடரின் லீக் சுற்றில் நெதர்லாந்து – தென்னாப்பிரிக்கா அணிகள் இடையேயான போட்டியின் முடிவில் நெதர்லாந்து அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது.
இந்த வெற்றியால் புள்ளிப் பட்டியலில் ஒரு வெற்றியுடன், 2 புள்ளிகளை பெற்று நெதர்லாந்து அணி 9வது இடத்தை பிடித்துள்ளது. தென்னாப்பிரிக்கா அணி தன் மூன்றாவது இடத்திலேயே உள்ளது.
ஆனால், மூன்று போட்டிகளின் முடிவில் தென்னாப்பிரிக்கா அணி 4 புள்ளிகள் மட்டுமே பெற்று மூன்றாவது இடத்தில் இருக்கிறது. புள்ளிகளை தாண்டி இந்த உலகக்கோப்பைத் தொடரில் நெட் ரன் ரேட் அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளது.
அதிக ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாலோ, சேஸிங் செய்யும் போது குறைந்த ஓவர்களிலேயே இலக்கை எட்டினாலோ, அதிக நெட் ரன் ரேட் கிடைக்கும். முன்னதாக தென்னாப்பிரிக்கா அணி இரண்டு போட்டிகளில் விளையாடி இரண்டிலும் பெரிய வெற்றிகளைப் பெற்று +2 என்ற அளவில் நெட் ரன் ரேட் வைத்திருந்தது. ஆனால், இப்போது நெதர்லாந்து அணியிடம் தோல்வி அடைந்த தென்னாப்பிரிக்காவின் நெட் ரன் ரேட் +1.385 ஆகா உள்ளது.
இந்தியா மூன்றுப் போட்டிகளின் முடிவில் மூன்று வெற்றிகள், 6 புள்ளிகள் பெற்று, +1.821 நெட் ரன் ரேட் உடன் புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறது. இரண்டாம் இடத்தில் இருக்கும் நியூசிலாந்து அணியும் 6 புள்ளிகள் பெற்று +1.604 நெட் ரன் ரேட் பெற்று இருந்தது.
இந்த இரண்டு அணிகளுக்கும் தென்னாப்பிரிக்கா +2 நெட் ரன் ரேட் உடன் பெரிய ஆபத்தாக இருந்தது. ஒருவேளை தென்னாப்பிரிக்கா அணி நெதர்லாந்து அணியை வீழ்த்தி இருந்தால் 6 புள்ளிகளை பெற்று இருப்பதோடு, நெட் ரன் ரேட் +3 என்ற அளவுக்கு கூட உயர்ந்து இருக்கும்.
அப்படி நடந்தால் அரை இறுதி சுற்றுக்கு முந்தைய கடைசி லீக் போட்டிகளில் தென்னாப்பிரிக்கா அதிக நெட் ரன் ரேட் காரணமாக அரை இறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை அதிகமாக வைத்திருக்கும். ஆனால், தற்போது மூன்றுப் போட்டிகளின் முடிவில் இந்தியா அதிக நெட் ரன் ரேட் கொண்ட அணியாக இருப்பதால், அடுத்து சில போட்டிகளில் தோல்வி அடைந்தாலும், நெட் ரன் ரேட் இந்திய அணிக்கு கடைசி நேரத்தில் அரை இறுதி வாய்ப்புக்கு கை கொடுக்கும் என்பது தெரியவந்துள்ளது.