நேபாளம் உட்பட மேலும் 7 நாடுகளுக்கு அரிசி ஏற்றுமதி: மத்திய அரசு அனுமதி!
Sep 13, 2026, 01:04 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நேபாளம் உட்பட மேலும் 7 நாடுகளுக்கு அரிசி ஏற்றுமதி: மத்திய அரசு அனுமதி!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 18, 2023, 05:00 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

நேபாளம், கேமரூன், கோட் டி ஐவரி, கினியா குடியரசு, மலேசியா, பிலிப்பைன்ஸ் மற்றும் சீஷெல்ஸ் ஆகிய நாடுகளுக்கு வெவ்வேறு அளவுகளில் பாஸ்மதி அல்லாத வெள்ளை அரிசியை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதி அளித்திருக்கிறது.

உள்நாட்டில் விலை உயர்வைத் தடுக்கும் வகையிலும், உள்நாட்டு உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும், கடந்த ஜூலை 20-ம் தேதி முதல் பாஸ்மதி அல்லாத வெள்ளை அரிசி ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்தது. மேலும், குறைந்தபட்ச வரி விதிப்பின் மூலம் அரிசி ஏற்றுமதியை முற்றிலுமாகத் தடுக்க முடியும் என்று மத்திய அரசு கருதியது.

இதையடுத்து, கடந்த ஆகஸ்ட் மாதம் 25-ம் தேதி பாஸ்மதி அல்லாது வெள்ளை அரிசி மீது 20 சதவீத வரி விதிப்பு செய்தது. அப்போது, இந்த வரி விதிப்பு அக்டோபர் 16-ம் தேதி நடைமுறையில் இருக்கும் என்றும் தெரிவித்திருந்தது. ஆனால், திடீரென கடந்த வாரம் 2024 மார்ச் 31-ம் தேதிவரை இந்த வரி விதிப்பு நடைமுறையில் இருக்கும் என்று தெரிவித்தது.

இதன் பிறகு, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகள் பாஸ்மதி அல்லாத வெள்ளை அரிசியை வழங்குமாறு இந்திய அரசிடம் வேண்டுகோள் விடுத்தன. இதையடுத்து, மேற்கண்ட இரு நாடுகளுக்கு மட்டும் வெள்ளை அரிசி ஏற்றுமதிக்கு மத்திய பா.ஜ.க. அரசு அளித்திருந்தது.

மேலும், ஏற்றுமதிக் கொள்கையில் திருத்தம் செய்யும்போது, ​​மற்ற நாடுகளின் உணவுப் பாதுகாப்புத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக அரசாங்கம் வழங்கிய அனுமதியின் அடிப்படையிலும், அவர்களின் அரசாங்கத்தின் கோரிக்கையின் அடிப்படையிலும் ஏற்றுமதி அனுமதிக்கப்படும் என்று தேசிய கூட்டுறவு ஏற்றுமதி லிமிடெட் நிறுவனம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், நேபாளம், பங்களாதேஷ், சீனா, கோட் டி ஐவரி, டோகோ, செனகல், கினியா, வியட்நாம், ஜிபூட்டி, மடகாஸ்கர், கேமரூன் சோமாலியா, மலேசியா பிலிப்பைன்ஸ் மற்றும் லைபீரியா ஆகிய நாடுகள் பாஸ்மதி அல்லாத வெள்ளை அரிசியை வழங்கும்படி கேட்டுக் கொண்டன.

இதைத் தொடர்ந்து, நேபாளம், கேமரூன், கோட் டி ஐவரி, கினியா குடியரசு, மலேசியா, பிலிப்பைன்ஸ் மற்றும் சீஷெல்ஸ் ஆகிய 7 நாடுகளுக்கு வெள்ளை அரிசியை ஏற்றுமதி செய்ய மத்திய பா.ஜ.க. அரசு அனுமதி வழங்கி இருக்கிறது. இந்த நாடுகளுக்கான ஏற்றுமதிகள் தேசிய கூட்டுறவு ஏற்றுமதி லிமிடெட் மூலம் அனுமதிக்கப்படுகிறது என்று வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் தெரிவித்திருக்கிறது.

இந்தியாவில் இருந்து பாஸ்மதி அல்லாத அரிசியை இறக்குமதி செய்யும் முக்கிய நாடுகளில் மேற்கு ஆப்பிரிக்க நாடான பெனின் நாடும் ஒன்று. ஏற்கெனவே, 2022 செப்டம்பரில் இந்தியா உடைந்த அரிசியை ஏற்றுமதி செய்வதைத் தடை செய்தது. பின்னர்,நவம்பர் மாதம் தடையை நீக்கியது குறிப்பிடத்தக்கது.

Tags: riceExport7 countries
Share
Tweet
SendShare
Previous Post

உலகக்கோப்பை கிரிக்கெட் : புள்ளி பட்டியல் !

Next Post

சர்க்கரை ஏற்றுமதி: கட்டுப்பாடு நீட்டிப்பு!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies