ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பை விட ஹமாஸ் மோசமான தீவிரவாத இயக்கம் எனவும், மனிதர்களை போர் கேடயமாக பயன்படுத்துவதாகவும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு குற்றம்சாட்டியுள்ளார்.
காஷா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதர் 11 வது நாளை எட்டியுள்ள நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அந்நாட்டிற்கு சென்றுள்ளார். அங்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை சந்தித்து பேசினார். இதனைத்தொடர்ந்து நெதன்யாகு செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, இது ஒரு வித்தியாசமான போராக இருக்கும் என்றும், ஹமாஸ் ஒரு வித்தியாசமான எதிரி. பொதுமக்களின் உயிரிழப்புகளை இஸ்ரேல் குறைக்க முயல்கிறது, ஹமாஸ் பொதுமக்களின் உயிரிழப்புகளை அதிகரிக்க முயல்கிறது என தெரிவித்தார்.
ஒவ்வொரு நாளும் அவர்கள் இரட்டை போர்க்குற்றத்தை செய்வதாகவும், இஸ்ரேல் மக்களை குறிவைத்து, தங்கள் பொதுமக்களுக்குப் பின்னால் ஒளிந்துகொண்டு, அவர்களை கேடயமாக பயன்படுத்துவதாகக் கூறினார்.
கடந்த 11 நாட்களில் ஹமாஸ் மனித குலத்திற்கு எதிரான இந்த கொடூரமான இரட்டைப் போர்க் குற்றத்தை செய்து வருகிறது. பொதுமக்கள் பலியாவதற்கு ஹமாஸ் பொறுப்பேற்க வேண்டும், நேற்று பாலஸ்தீனப் பயங்கரவாதிகளால் ஏவப்பட்ட ராக்கெட் இலக்கு மாறி பாலஸ்தீன மருத்துவமனையில் மேல் விழுந்தது என நெதன்யாகு தெரிவித்தார்.