தி.மு.க.,எம்.பி ஜெகத்ரட்சகன் தொடர்புடைய இடங்களில் நடத்தப்பட்ட வருமானவரி சோதனையில் மத்திய அரசின் கல்வி உதவிதொகை திட்டத்தின் கீழ் ரூ.25கோடி முறைகேடு செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, ரூ.400 கோடிக்கு போலி ரசீதுகள் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாக வருமானவரித்துறை தெரிவித்துள்ளது.
தமிழகம் மற்றும் புதுவையில் நடந்த பல்வேறு சோதளையில் கணக்கில் காட்டப்படாத ரூ.4 கோடி போலி ரசீதுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மதுபான ஆலைகள் மற்றும் மருத்துவமனை உள்ளிட்ட 100 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.
சோதனையின்போது கல்வி கட்டணம் பெற்றது தொடர்பான ரூ.400கோடிக்கான ரசீதுகளும் கணக்கில் வரவில்லை.
மத்திய அரசின் கல்வி உதவிதொகை திட்டத்தின் கீழ் ரூ.25கோடி முறைகேடு செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மது ஆலை தொடர்பான கணக்குகளில் ரூ.500 கோடிவரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
இடைத்தரகர்களிடம் இருந்து மாணவர் சேர்க்கைக்காக ரூ.25 கோடி பெறப்பட்டதாக ஆவணங்கள் சிக்கிஉள்ளது. சோதனைகளின் போது கணக்கில் வராத ரூ.32 கோடிரொக்கம் மற்றும் ரூ.28 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்: பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் விசாரணைதொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.
ஜெகத்ரட்சகன் அறக்கட்டளையில் இருந்து ரூ.300கோடி அளவிற்கு பல்வேறு தொழில் நிறுவனங்களுக்கு பண பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
ஆந்திராவை சேர்ந்த முக்கிய குழுமத்திற்கு பணம் சென்றுள்ளது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது என வருமானவரித்துறை தெரிவித்துள்ளது.
















