திமுக கூறிய, கரும்புக்கு குறைந்தபட்ச ஆதார விலை, ஒரு டன்னுக்கு 4000 ரூபாய், வாழைக்கு குறைந்தபட்ச ஆதார விலை, ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்தில் நெல் கிடங்கு அமைக்கப்படும் என்ற ஒரு வாக்குறுதியைக் கூட நிறைவேற்றவில்லை எனத் தமிழக பாஜக தலைவர் மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலையின் ”என் மண் என் மக்கள்” பாதயாத்திரை கோபிச்செட்டிப் பாளையத்தில் நேற்று நடைப்பெற்றது. இந்த பாதயாத்திரையில் ஆயிரக்கணக்காணோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் உரையாற்றிய அண்ணாமலை,
இப்பகுதியில், தானதர்மங்கள் பல செய்த வள்ளல் கோபிசெட்டிப்பிள்ளான் என்பவர் நினைவாக கோபிச்செட்டிபாளையம் என்று பெயர் பெற்றது. இங்குள்ள நம்பியூர் அருகே, 3000 ஆண்டுகள் பழமையான பெருங்கற்கால சின்னம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவ்வளவு பழமையும் வரலாறும் கொண்ட பகுதி இது.
பட்டுக்கூடு உற்பத்தியில், கோபிசெட்டிபாளையம் நாட்டிலேயே முன்னணியில் உள்ளது. தேசிய அளவில் பட்டு உற்பத்தியில் தமிழ்நாடு நான்காவது இடத்தில் உள்ளது. கோபி என்றாலே விவசாயத்துக்கு பெயர்போன பகுதி. 2 லட்சம் ஏக்கர் பரப்பளவில் விவசாயம் இங்கு நடைபெறுகிது. விவசாயத்தின் மூலம் மட்டுமே 1000… pic.twitter.com/asa5LikmBq
— K.Annamalai (@annamalai_k) October 19, 2023
பட்டுக்கூடு உற்பத்தியில், கோபிசெட்டிபாளையம் நாட்டிலேயே முன்னணியில் உள்ளது. தேசிய அளவில் பட்டு உற்பத்தியில் தமிழ்நாடு நான்காவது இடத்தில் உள்ளது. கோபி என்றாலே விவசாயத்துக்கு பெயர்போன பகுதி. 2 லட்சம் ஏக்கர் பரப்பளவில் விவசாயம் இங்கு நடைபெறுகிது. விவசாயத்தின் மூலம் மட்டுமே 1000 கோடிக்கு வர்த்தகம் நடைபெறுகிறது. கோபிக்கே உரித்தான சேனைக்கிழங்கும், பூசணிக்காயும் 2500 ஏக்கர் அளவுக்கு இங்கே பயிரிடப்படுகிறது.
ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியங்களுக்கும், விவசாய மேம்பாட்டிற்காக குளர்பதனக்கிடங்கு அமைக்க வேண்டும், மஞ்சள், வாழை, கரும்பு உள்ளிட்ட பயிர்களுக்கு விலை நிர்ணயம் செய்து அரசே கொள்முதல் செய்ய ஏற்பாடு செய்யவேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கையாக இருக்கிறது.
திமுக கூறிய, கரும்புக்கு குறைந்தபட்ச ஆதார விலை, ஒரு டன்னுக்கு 4000 ரூபாய், வாழைக்கு குறைந்தபட்ச ஆதார விலை, ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்தில் நெல் கிடங்கு அமைக்கப்படும் என்ற ஒரு வாக்குறுதியைக் கூட நிறைவேற்றவில்லை.
கோபி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நம்பியூர் பகுதிகளில், பெரும்பாலும் பனை ஏறும் தொழில் செய்து வருகின்றனர் இவர்கள் தயாரிக்கும் கருப்பட்டி, பனைவெல்லம் போன்றவற்றை சேமித்து விற்பனை செய்ய சேமிப்பு கிடங்கு அமைத்து தர பல முறை மனு அளித்தும், தற்போது வரை சேமிப்பு கிடங்கு அமைத்து தரவில்லை.
திமுக தேர்தல் வாக்குறுதி எண் 56ல், பனை வெல்லத்தை விவசாய கூட்டுறவு சங்கங்கள் நேரடியாக கொள்முதல் செய்யும் மற்றும் சேமிப்பு கிடங்கு அமைப்போம் என்று கூறியிருந்தார்கள். அதனையும் நிறைவேற்றவில்லை.
கொடிவேரி அணை 1125ஆம் ஆண்டு ஊராளி செம்ப வேட்டுவர் செயங்கொண்ட சோழ கொங்காள்வானால் கட்டப்பட்டது. ஒரு ஆற்றில் குறிப்பிட்ட அளவுக்கு மேல் தண்ணீர் எடுக்கக்கூடாது. குறிப்பிட்ட அளவு ஆற்றின் நீர் கடலில் கலக்க வேண்டும்.
ஆற்றின் நீரியல் போக்கு, திசையில் இருந்து 50 சதவீதத்துக்கும் மேலாக எந்தக் காரணம் கொண்டும் திருப்பக்கூடாது என்கிற நவீன அறிவியல் கூறும் உலக ஆறுகள் பாதுகாப்பு விதிமுறைகளை, அந்தக் காலத்திலேயே நம் முன்னோர்கள் கொடிவேரி அணைக்கட்டுப் பாசனத்தில் நடைமுறைப்படுத்தியிருக்கிறார்கள். இது தான் தமிழரின் அறிவியல் அறிவு.
கோபி பகுதியில், காந்தி அடிகளால் ஈர்க்கப்பட்டு சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்று 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்தவர் மறைக்கப்பட்ட சுதந்திரப் போராட்ட வீரர் லட்சுமண ஐயர். தனது குடும்ப சொத்தான 345 ஏக்கர் நிலத்தை விற்று பட்டியல் சமூகக் குழந்தைகளுக்கு தங்கும் வசதிகொண்ட பள்ளிகளை கட்டிக்கொடுத்தவர்.
கோபி நகராட்சித் தலைவராக இருந்தபோது மனித கழிவுகளை மனிதனே அள்ளக்கூடாது என்று தடை விதித்தார். கோபி நகர குடிநீர்த் திட்டத்தைக் கொண்டுவந்ததோடு, தன்னுடைய சொந்த நிலத்தை இலவசமாக வழங்கினார். 1972-ல் திமுக கொண்டு வந்த மின் கட்டண உயர்வுக்கு எதிராக நடந்த விவசாயிகள் போராட்டத்தில் சிறை சென்றார். கோபி நகரம் தியாகி லட்சுமண ஐயர் போன்ற சீர்திருத்தவாதிகளால் பெருமை கொள்கிறது.
ஈரோடு மாவட்டத்துக்கு, பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கொண்டு வந்த நலத் திட்டங்கள் ஏராளம். ஆனால் திமுக, ஈரோடு மாவட்டத்துக்குக் கொடுத்த ஒரு தேர்தல் வாக்குறுதியைக் கூட நிறைவேற்றவில்லை.
வரும் பாராளுமன்ற தேர்தலில், இந்த மக்கள் விரோத திமுக கூட்டணியை முற்றிலுமாகப் புறக்கணித்து, தமிழகம் முழுவதும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்து, பாரதப் பிரதமர் மோடியை மூன்றாவது முறையாகப் பிரதமராகத் தேர்ந்தெடுப்போம் எனத் தெரிவித்தார்.