ஒடிசா, திரிபுரா ஆகிய மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
ஒடிசா, திரிபுரா மாநிலங்களின் ஆளுநர்களாக ஜாா்க்கண்ட் முன்னாள் முதல்வர் ரகுபாா் தாஸ் மற்றும் பாஜக தலைவர் இந்திர சேனா ரெட்டி நல்லு ஆகியோரை நியமித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முா்மு உத்தரவிட்டார்.
இதுகுறித்து குடியரசுத் தலைவா் மாளிகை வெளியிட்ட அறிக்கையில், ‘ஒடிசா ஆளுநராக ரகுபாா் தாஸ் மற்றும் திரிபுரா ஆளுநராக இந்திர சேனா ரெட்டி நல்லு ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த நியமனங்கள், அவா்கள் ஆளுநராகப் பதவியேற்கும் நாளில் இருந்து நடைமுறைக்கு வரும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒடிசா ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ரகுபாா் தாஸ், கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் 2019-ஆம் ஆண்டு வரை, ஜாா்க்கண்ட் மாநில முதல்வராக இருந்தாா். பாஜக தேசியத் துணைத் தலைவராகப் பதவி வகித்து வரும் ரகுபார் தாஸ், தற்போது, ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அதேபோல், தெலுங்கானா மாநில பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவரான இந்திர சேனா ரெட்டி நல்லு, திரிபுரா ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.