காஷா மீது தாக்குதல் தொடரும் நிலையில் இஸ்ரேலிய காவல்துறைக்கு கேரள மாநிலத்தில் இருந்து சீருடைகள் செல்கின்றன.
கேரள மாநிலத்துடன் இஸ்ரேலின் காவல்துறைக்கு குறிப்பிடத்தக்கத் தொடர்பு உள்ளது. இந்தியாவில் யூதர்கள் வசிக்கும் இரண்டு முக்கிய நகரங்களில் கொச்சி மற்றும் கோழிக்கோடு முக்கியமானவை, கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தை சேர்ந்த மரியன் அப்பேரல் பிரைவேட் லிமிடெட், ஆண்டுதோறும் சராசரியாக ஒரு லட்சம் யூனிட் இஸ்ரேலிய போலீஸ் சீருடைகளை உற்பத்தி செய்து அனுப்புகிறது. இங்கு சுமார் 1500 தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர்.
பிலிப்பைன்ஸ் ராணுவம் மற்றும் குவைத் அரசாங்க அதிகாரிகளுக்கு ஏற்கனவே சீருடை தயாரித்து அனுப்பியுள்ளதாகவும், அதனைத்தொடர்ந்து இஸ்ரேல் ஆர்டர் கிடைத்ததாக அந்நிறுவன மேலாளர் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலில் இருந்து வந்த அதிகாரிகள் தொழிற்சாலை எவ்வாறு செயல்படுகிறது என்பதை ஆய்வு செய்து பின்னர் ஒப்பந்தம் செய்ததாக அவர் கூறினார். ஆண்டுதோறும் வழங்கப்பட்ட ஆர்டர்களை வெற்றிகரமாக சப்ளை செய்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.