சுதந்திர போராட்ட வீரரான நாமக்கல் கவிஞர் பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது.
“கத்தியின்றி இரத்தமின்றி யுத்தமொன்று வருகுது
சத்தியத்தின் நித்தியத்தை நம்பும் யாரும் சேருவீர்
“தமிழ னென்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா…”
“தமிழன் என்றோர் இனமுண்டு
தனியே அவற்கொரு குணமுண்டு
அமிழ்தம் அவனுடைய மொழியாகும்
அன்பே அவனுடைய வழியாகும்”
என்ற இந்த வரிகள் மிக பிரபலம். ஆம் இந்த வரிகளுக்கு சொந்தக்காரான நாமக்கல் கவிஞர் என அழைக்கப்படும் வி. ராமலிங்கம் பிள்ளையின் பிறந்த நாள் இன்று. சுதந்திர போராட்ட வீரரான அவர், நாமக்கல் மாவட்டம் மோகனூரில் 1888ஆம் ஆண்டு அக்டோபர் 19ஆம் தேதி பிறந்தவர்.
நாமக்கல் மற்றும் கோயம்புத்தூரில் பள்ளி படிப்பை முடித்த அவர், திருச்சி பிஷப் ஹெபர் கல்லூரியில் பட்டப்படிப்பு பயின்றார். இவர் ஆரம்பக்காலத்தில் நாமக்கல் தாசில்தார் அலுவலகத்தில் எழுத்தாளராகவும் பின்னர் தொடக்கப் பள்ளி ஆசிரியராகவும் பணியாற்றினார்.
சுதந்திர போராட்ட வீரரான இவர் , தனது திறமையான பேச்சினால் பல இளைஞர்களை தேசத் தொண்டர்களாக மாற்றியவர். 1930 இல் நடைபெற்ற உப்புச் சத்தியாகிரக போராட்டத்தில் கலந்துகொண்டு ஓராண்டு சிறை சென்றார்.
ஐந்து, கவிதை தொகுப்புகள், 15, கட்டுரை நுால்கள், 15, இலக்கிய நுால்கள், 14, வாழ்க்கை வரலாறுகள், ஏழு, இசை ஆய்வு நுால்கள், நான்கு, மொழி பெயர்ப்பு நுால்கள், மூன்று, நாடகங்கள், இரண்டு, திருக்குறள் உரை ஒன்று என, மொத்தம், 66 நுால்களை எழுதியுள்ளார். இன்று நாடு முழுவதும், அவரது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது.
தமிழ்நாட்டின் முதல் அரசவைக் கவிஞர்’. சாகித்திய அகாடமியில் தமிழ்ப் பிரதிநிதி என பல பொறுப்புகளை வகித்தவர். அவரின் சாதனைகளை போற்றும் வகையில் பத்ம பூஷண்’ பட்டம் வழங்கப்பட்டது.