நிலக்கரி அமைச்சகம், நடப்பு நிதியாண்டின் முதலாவது அரையாண்டில் சாதனை அளவாக 500 மில்லியன் டன் நிலக்கரியை அனுப்பி இருக்கிறது.
2023-24-ம் நிதியாண்டில், நிலக்கரி அமைச்சகம் 1,012 மில்லியன் டன் நிலக்கரியை உற்பத்தி செய்து நுகர்வோருக்கு அனுப்ப இலக்கு நிர்ணயித்திருக்கிறது. அதன்படி, 2023 அக்டோபர் 17-ம் தேதி நிலவரப்படி 500 மில்லியன் டன் நிலக்கரியை அமைச்சகத்தால் அனுப்ப முடிந்தது. மழைக்காலத்துக்கு இடையிலும் 200 நாட்களில் 500 மில்லியன் டன் நிலக்கரியை அனுப்பி இருக்கிறது.
நிதியாண்டின் 2-வது அரையாண்டில், உற்பத்தி மற்றும் அனுப்புதல் விகிதம், ஆண்டின் முதல் அரையாண்டை விட அதிகமாக இருக்கும். எனவே, இந்த ஆண்டு நிலக்கரி ஏற்றுமதி ஒரு பில்லியன் டன்னைக் கடந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுவதாக நிலக்கரி அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.
கடந்த நிதியாண்டில், 2022 நவம்பர் 9-ம் தேதி நிலவரப்படி, 500 மில்லியன் டன் நிலக்கரி அனுப்பும் மைல்கல்லை எட்டி இருக்கிறது. நடப்பாண்டில், 23 நாட்களுக்கு முன்பே, 500 மில்லியன் டன் ஏற்றுமதி என்ற இலக்கை எட்டி விட்டது.
அனுப்பப்பட்ட 500 மில்லியன் டன் நிலக்கரி ஏற்றுமதியில், 416.57 மில்லியன் டன் மின்துறைக்கும், 84.77 மில்லியன் டன் ஒழுங்குமுறை அல்லாத துறைக்கும் அனுப்பப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மின் துறைக்கு நிலக்கரி ஏற்றுமதி ஆண்டுக்கு ஆண்டு 7.27 சதவீதமும், ஒழுங்குமுறைப்படுத்தப்படாத துறைகளுக்கு 38.02 சதவீதமும் அதிகரிக்கிறது.
2023 மார்ச் 31-ம் தேதி நிலவரப்படி 893.19 மில்லியன் டன் நிலக்கரி அனுப்பப்பட்டிருக்கிறது. நிலக்கரி அமைச்சகத்தின் இந்த வரலாற்று சாதனைக்கு இந்திய நிலக்கரி நிறுவனம், சிங்கரேணி நிலக்கரி நிறுவனம், மற்றும் கேப்டிவ், கமர்ஷியல் சுரங்கங்கள் அனைத்தும் பங்களித்திருப்பதாக நிலக்கரி அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.