தரவு அடிப்படையிலான பயிற்சி மற்றும் திறன் மேம்பாடு முக்கியம் !- பியூஷ் கோயல்.
Sep 12, 2026, 04:42 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தரவு அடிப்படையிலான பயிற்சி மற்றும் திறன் மேம்பாடு முக்கியம் !- பியூஷ் கோயல்.

Murugesan M by Murugesan M
Oct 19, 2023, 07:15 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

எளிதான வாழ்க்கை, எளிதாக வர்த்தகம் புரிவதை மேம்படுத்த ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்ட முடிவுகளை எடுப்பதில் பிரதமரின் விரைவு சக்தியின் பங்களிப்பு குறித்து மத்திய வர்த்தகம் மற்றும்  தொழில்துறை அமைச்சர்  பியூஷ் கோயல் எடுத்துரைத்தார்.

திறன் மேம்பாட்டு ஆணையத்துடன் இணைந்து தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை ஏற்பாடு செய்த ‘பிரதமரின்  விரைவுசக்தி தேசிய பெருந்திட்ட திறன் மேம்பாட்டிற்கான டிஜிட்டல் கற்றல் வளங்களை மேம்படுத்துதல்’ குறித்த பயிலரங்கை மத்திய அமைச்சர்  பியூஷ் கோயல் தொடங்கிவைத்தார்.

கூட்டத்தில் உரையாற்றிய மத்திய அமைச்சர்  பியூஷ் கோயல், பன்முக உள்கட்டமைப்பு மற்றும் தளவாட மேம்பாட்டுக்கு பிரதமரின் விரைவு சக்தி கொள்கைகளை பரவலாக ஏற்றுக் கொள்வதை உறுதி செய்ய தரவு அடிப்படையிலான பயிற்சி மற்றும் திறன் மேம்பாடு முக்கியம் என்று கூறினார்.

பிரதமரின் விரைவு சக்தி கொள்கைகளின் அடிப்படையில் அரசு அலுவலர்களின் பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டைப் பரவலாக்குதல் மற்றும் முறைப்படுத்துதல் ஆகியவற்றில் இந்தப் பயிலரங்கு கவனம் செலுத்தியது.

உள்கட்டமைப்பு மற்றும் தளவாடங்களின் திட்டமிடல் மற்றும் மேம்பாட்டில் பிரதமரின் விரைவு சக்தி அணுகுமுறையை செயல்படுத்துவது குறித்த துறை சார்ந்த பயிற்சித் தொகுதிகளின் உள்ளடக்கம், கட்டமைப்பு மற்றும் வடிவமைப்பு குறித்து விவாதிக்கப்பட்டது.

லால் பகதூர் சாஸ்திரி தேசிய நிர்வாக நிறுவனம், இந்திய ரயில்வேயின் தேசிய நிறுவனம் உள்ளிட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட 70 க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள்; மகாராஷ்டிரா ரிமோட் சென்சிங் அப்ளிகேஷன் மையம், ஹரியானா பொது நிர்வாக நிறுவனம் போன்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் இந்தப் பயிலரங்கில் கலந்து கொண்டனர்.

Tags: Central Ministerpiyush goyal
Share
Tweet
SendShare
Previous Post

உலகக்கோப்பை: இந்தியாவுக்கு 257 ரன்கள் இலக்கு!

Next Post

முதலாவது அரையாண்டில் 500 டன் நிலக்கரி அனுப்பி சாதனை!

Related News

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies