மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி பக்தர்களால் அம்மா என அழைக்கப்பட்ட பங்காரு அடிகளாரின் இறுதிச்சடங்கு முழு அரசு மரியாதையுடன் இன்று மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது.
வயது முதிர்வு, உடல்நலக்குறைவு காரணமாக மேல் மருவத்தூர் கோயில் வளாகத்தில் உள்ள வீட்டில் பங்காரு அடிகளார் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் நேற்று மாலை 5 மணிக்கு அவர் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 82. இதனையடுத்து அவரது உடல் பக்தர்களின் அஞ்சலிக்காக அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.
அங்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அவரது இறுதிச்சடங்கு இன்று மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது. இதனிடையே அவரது இறுதிச்சடங்கு முழு அரசு மரியாதையுடன் நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இறுதிச்சடங்கில் ஏராளமானோர் பங்கேற்கக்கூடும் என்பதால் மேல் மருவத்தூரில் 2000க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.