கோவையில் உள்ள பிரபல கோவிலான மருதமலை திருக்கோவிலில், பா.ஜ.கவின் சிறுபான்மைப் பிரிவின் தேசிய செயலாளராக வேலூர் இப்ராஹிம் சுவாமி வழிபாடு செய்தார்.
கோவை நகரிலிருந்து சுமார் 15 கி.மீ தொலைவில் உள்ளது மருதமலை. இங்கு அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது.
இயற்கை எழில் சூழ கடல் மட்டத்திலிருந்து சுமார் 741 மீட்டர் உயரத்தில் 7 நிலை இராஜகோபுரத்துடன் அழகுற அமையப் பெற்றுள்ள இந்த திருக்கோவில் பழமையும் பெருமையும் வாய்ந்தது.
இங்குள்ள முருகன் மருதமலையான், மருதப்பன், மருதாசலமூர்த்தி ஆகிய திருப்பெயர்களால் அழைக்கப் பெறுகிறார்.
இத்தலத்து இறைவனான முருகன், சுப்பிரமணியசுவாமி என்ற திருநாமத்துடன் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
இதனால், இந்த திருத்தலத்திற்குத் தமிழகம், கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து தினசரி பெரும்பாலான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வது வழக்கம்.
இந்த நிலையில், கோவையில் உள்ள பிரபல கோவிலான மருதமலை திருக்கோவிலில், பா.ஜ.கவின் சிறுபான்மைப் பிரிவின் தேசிய செயலாளராக வேலூர் இப்ராஹிம் சுவாமி மனம் உருக வழிபாடு செய்தார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.