ஜார்க்கண்ட் மாநில ஆளுநரான சிபி ராதாகிருஷ்ணனுக்கு இன்று பிறந்த நாளை முன்னிட்டு, மத்திய இணை அமைச்சர் எல். முருகன் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
கோவையைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன், கடந்த 1998 -ம் ஆண்டு மற்றும் 1999-ம் ஆண்டுகளில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக சார்பில் 2 முறை வென்று மக்களவை உறுப்பினராக பணியாற்றியவர்.
கடந்த 2016-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை தேசிய கயிறு வாரியத்தின் தலைவராகப் பதவி வகித்துள்ளார். தமிழக பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவராக திகழ்ந்து வந்தார்.
பாஜகவின் முன்னாள் தமிழக தலைவரும், கட்சியின் தேசிய செயலாளராக பணியாற்றிய சி.பி.ராதாகிருஷ்ணனை, கடந்த பிப்ரவரி மாதம் ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக நியமித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உத்தரவிட்டுள்ளார்.
இந்த நிலையில், ஜார்க்கண்ட் மாநில ஆளுநரான சிபி ராதாகிருஷ்ணனுக்கு இன்று பிறந்த நாளை முன்னிட்டு, முக்கியத் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், மத்திய இணை அமைச்சர் எல். முருகன் நேரில் சந்தித்து , பொன்னாடை போர்த்தி, பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.
மேலும், அவர் தனது எக்ஸ் பதிவில் இன்று பிறந்தநாள் காணும் தமிழக பாஜக முன்னாள் மாநில தலைவரும், இரு முறை மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர், தற்போதைய ஜார்க்கண்ட் மாநிலத்தின் ஆளுநருமான பாசத்திற்குரிய அண்ணன் திரு. சி.பி.ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு என் அன்பார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
எல்லா வளமும் பெற்று உடல் ஆரோக்கியத்துடன் தேசப்பணி தொடர எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.