ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய புள்ளிப் பட்டியல்.
ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெறப் போட்டியில் இந்தியா 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிப் பெற்றது.
இந்தத் தொடரில் இதுவரை இந்தியா நான்கு போட்டிகளில் விளையாடி நான்கு போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. அதேப் போல் நியூசிலாந்து அணியும் நான்கு போட்டிகளிலும் விளையாடி நான்கு போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.
இதன்படி தற்போது புள்ளி பட்டியலில் நியூசிலாந்து அணி 8 புள்ளிகளுடன் 1.923 நெட் ரன் ரேட் பெற்று முதலிடத்தில் உள்ளது. இந்தியா 8 புள்ளிகளுடன் 1.659 நெட் ரன் ரேட் பெற்று இரண்டாம் இடத்தில உள்ளது.
வங்கதேசதுக்கு எதிரான போட்டியில் இந்தியா 257 ரன்கள் வெற்றி இலக்கை 41.3 ஓவர்களில் எட்டி இருந்தது. இதே இலக்கை இன்னும் 7 ஓவர்களுக்கு முன்பாக இந்தியா எட்டி இருந்தால் நியூசிலாந்து அணியை முந்தி புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தை பிடித்து இருக்க முடியும். அடுத்தப் போட்டியில் இந்தியா இன்னும் பெரிய வெற்றியை பெற்றால் முதல் இடத்தை பெற வாய்ப்பு உள்ளது.
இதே உலகக்கோப்பை புள்ளிப் பட்டியலில், இந்திய அணியிடம் தோல்வி அடைந்த வங்கதேசம் 4 போட்டிகளில் ஒரு வெற்றி மட்டுமே பெற்று ஏழாம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. மூன்றாவது மற்றும் நான்காவது இடத்தில் தென்னாப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகள் உள்ளன.
இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் ஐந்து மற்றும் ஆறாவது இடத்தில் உள்ளன. அந்த இரண்டு அணிகளும் மூன்று போட்டிகளில் ஆடி ஒரு வெற்றியை பதிவு செய்துள்ளன. நெதர்லாந்து, ஆப்கானிஸ்தான், இலங்கை ஆகிய அணிகள், எட்டு, ஒன்பது மற்றும் பத்தாவது வரிசையில் இடம் பெற்றுள்ளன. இதில் இலங்கை அணி மட்டுமே இன்னும் ஒரு போட்டியில் கூட வெற்றி பெறவில்லை.