ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் போராடி சதம் அடித்த விராட் கோலி.
ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்றப் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது.
இந்தப் போட்டியில் வங்கதேச அணி 256 ரன்கள் எடுத்திருந்தது, இந்த இலக்கை இந்திய வீரர்கள் எளிதில் நெருங்கிவிட்டனர். இதில் ரோஹித் சர்மா 48 ரன்களுக்கும், கில் 53 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர்.
இந்த நிலையில் களத்தில் இறங்கிய விராட் கோலி அதிரடியாக விளையாடிக் கொண்டிருக்க மறுபக்கம் விளையாடி வந்த ஸ்ரேயாஸ் ஐயர் ஆட்டமிழந்து போனார். அடுத்ததாக கே.எல்.ராகுல் களமிறங்கினர்.
அப்போது கடைசி சில ஓவர்களில் அணியின் வெற்றிக்கு 34 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது சிறப்பாக விளையாடி வந்த விராட் கோலி 70 ரன்கள் சேர்த்திருந்தார். அவர் சதம் அடிக்க 30 ரன்கள் தேவைப்பட்ட்டது.
அப்போது சதம் அடிக்க முடிவு செய்த விராட் அடுத்த நான்கு ஓவர்களையும் தானே ஆட, ராகுலுக்கு ஸ்ட்ரைக் தராமல் ஓவரின் முடிவில் சிங்கிள் ரன் ஓடி அடுத்த ஓவரையும் தானே எடுத்துக் கொண்டு வந்தார். அதற்கேற்றார் போல் ராகுலும் தனக்கு ஸ்ட்ரைக் வேண்டாம் என்று கூறிவிட்டார்.
விராட் கோலியின் சதத்தை தடுக்கும் விதமாக வங்கதேசத்தின் பந்துவீச்சாளர் நசும் அஹ்மத் 42வது ஓவரின் முதல் பந்தை வேண்டுமென்றே வைடாக வீசினார். அதனால் இந்திய அணி வெற்றி பெற 2 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது விராட் கோலி சதம் அடிக்க 3 ரன்கள் தேவைப்பட்டது.
இந்த நிலையில் நசும் அஹ்மத் மீண்டும் ஒரு வைட் பந்தை வீசினார் ஆனால் அப்போது களத்தில் இருந்த அம்பயர் வைட் கொடுக்காமல் விராட் கோலிக்கு சாதகமாக செயல்பட்டார், இந்த செயல் அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாகியது. அப்போது 42 வது ஓவரில் 3 வது பந்தில் கோலி சிக்சர் அடித்து 103 ரன்களை எடுத்தார், அதேப்போல் இந்திய அணியும் 261 ரன்கள் அடித்து வெற்றிப் பெற்றது.