பங்காரு அடிகளாருக்கு ஜார்கண்ட் ஆளுநர் இராதாகிருஷ்ணன், மத்திய இணையமைச்சர் எல். முருகன், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினார்கள்.
ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் நிறுவனரான ஆன்மிக குரு பங்காரு அடிகளார் நேற்று மறைந்தார். அவருக்கு வயது 82. அடிகளாரின் மறைவு, அவரது பக்தர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் நிறுவனரான ஆன்மிக குரு பங்காரு அடிகளார் உடலுக்கு பொது மக்கள், கட்சி தலைவர்கள், ஆளுநர்கள் உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினார்கள்.
இந்நிலையில் இவரது உடலுக்கு ஜார்கண்ட் ஆளுநர் இராதாகிருஷ்ணன், மத்திய இணையமைச்சர் எல். முருகன், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினார்கள்.
இது குறித்து தனது எக்ஸ் பதிவில்,
பக்தர்களால் அம்மா என்று அன்புடன் அழைக்கப்படும் அன்னை ஆதிபராசக்தி சித்தர் பீட நிறுவனர் தவத்திரு பங்காரு அடிகளார் அவர்கள் நேற்றைய தினம் முக்தியடைந்தார்.
பக்தர்களால் அம்மா என்று அன்புடன் அழைக்கப்படும் அன்னை ஆதிபராசக்தி சித்தர் பீட நிறுவனர் தவத்திரு பங்காரு அடிகளார் அவர்கள் நேற்றைய தினம் முக்தியடைந்தார். அவரது பூதவுடலுக்கு, @BJP4Tamilnadu சார்பாக நேரில் சென்று மலரஞ்சலி செலுத்தி வணங்கினோம்.
தவத்திரு பங்காரு அடிகளார் அவர்களின்… pic.twitter.com/n1upXRnsYE
— K.Annamalai (@annamalai_k) October 20, 2023
அவரது பூதவுடலுக்கு, தமிழக பாஜக சார்பாக நேரில் சென்று மலரஞ்சலி செலுத்தி வணங்கினோம். தவத்திரு பங்காரு அடிகளார் அவர்களின் ஆன்மீகப் பணிகள், தமிழகம் மட்டுமின்றி, உலகெங்கும் உள்ள கோடிக்கணக்கான பக்தர்களுக்கு என்றும் வழிகாட்டியாக விளங்கும்.
அவரது கல்விப் பணிகள், பல இளைஞர்களின் வாழ்க்கையைச் சிறப்புறச் செய்திருக்கின்றன. அடிகளாரின் பூதவுடல் நம்மை விட்டுப் பிரிந்தாலும், அவரது ஆன்மீக வழிகாட்டுதல் என்றும் நம்முடனே இருக்கும் எனத் தெரிவித்துள்ளார்.