இந்தியா – வங்கதேசம் அணிகளுக்கு இடையிலானப் போட்டியில் நிகழ்ந்த சுவாரஸ்யங்களை வைத்து இரசிகர்கள் உருவாக்கிய மீம்ஸை பார்க்கலாம்.
1. வங்கதேச அணிக்கு எதிரானப் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி 6 ஆண்டுகளுக்கு பின் பந்துவீசியுள்ளார். ஹர்திக் பாண்டியா பந்துவீசும் போது திடீரென 3 பந்துகளை வீசிய போதே காயத்தால் வெளியேறியதால், அந்த ஓவரை முடிக்க விராட் கோலி பவுலிங் செய்தார்.
இதனை லியோ படத்தின் ரிலீஸை மையப்படுத்தி விஜய் ரசிகர்களிடம், விராட் கோலி ரசிகர்கள், “லியோ-ல என்ன சர்ப்ரைஸு.. இன்னைக்கு தலைவன் கொடுத்தான் பாரு சர்ப்ரைஸு” என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ளது.
2. பாகிஸ்தான் அணிக்கு எதிரானப் போட்டியில் ரோகித் சர்மா 86 ரன்களில் ஆட்டமிழந்து சதம் விளாசும் வாய்ப்பை தவறவிட்டார். அதேப் போல் நேற்றைய ஆட்டத்தில் ரோகித் சர்மா 48 ரன்கள் எடுத்து சதம் அடிக்கும் வாய்ப்பை மீண்டும் தவறவிட்டார். இதனை வைத்து மாயில் படத்தில், “இப்போ தும்மினால் தான் சரியா இருக்கும்” என்ற வசனத்தை மாற்றி, “இப்போ அவுட்டான தான் சரியாக இருக்கும்” என்று உருவாக்கப்பட்டுள்ளது.
3. நேற்றைய ஆட்டத்தில் விராட் கோலி சதம் அடிப்பதற்காக கே.எல். ராகுல் அதிக டாட் பால்களை விளையாடினார். அதேபோல் பாகிஸ்தான் அணிக்கு எதிரானப் போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் அரைசதம் விளாச டாட் பால்களை விளையாடினார். ஆனால் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரானப் போட்டியில் கே.எல். ராகுல் சதம் அடிக்கும் வாய்ப்பை மிஸ் செய்தார். இதனை அன்பே சிவம் படத்துடன் ஒப்பிட்டு, “அந்த மனசுதான் சார் கடவுள்” என்று உருவாக்கப்பட்டுள்ளது.
4. உலகக்கோப்பை தொடரில் ரோகித் சர்மா தனது பீஸ்ட் பார்மை வெளிப்படுத்தி வருகிறார். இதுவரை 4 போட்டிகளில் விளையாடி 265 ரன்களை விளாசி இருக்கிறார். இதனை வைத்து ஷாஜகான் படத்தில் விஜய், “உண்மை காதல்னா சொல்லு உயிரை கூட கொடுப்பேன்” என்று சொல்லுவார். அதனை மாற்றி, உலகக்கோப்பைனா சொல்லு உயிரை கொடுத்து ஆடுறேன்” என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ளது.
5. நேற்றைய ஆட்டத்தில் விராட் கோலி சதம் விளாசியதன் மூலமாக உலகக்கோப்பை தொடரில் அதிக ரன்கள் விளாசிய வீரர்கள் பட்டியலில் இரண்டாம் இடத்திற்கு முன்னேறினார். அதேபோல் முதலிடத்தில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா 265 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார். இதனை மங்காத்தா படத்தில் அஜித், அர்ஜுன் இருவரும் இணைந்து கொள்ளையடித்து வருவது போல், இந்திய அணியின் இருவரும் முதல் இரு இடங்களில் இருப்பதாக உருவாக்கப்பட்டுள்ளது.