உடல்நலக்குறைவால் காலமான பங்காரு அடிகளார் உடல் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்ட்டது.
வயது முதிர்வு, உடல்நலக்குறைவு காரணமாக மேல் மருவத்தூர் கோவில் வளாகத்தில் உள்ள வீட்டில் பங்காரு அடிகளார் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று மாலை 5 மணியளவில் அவர் காலமானார்.
அவரது மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தெலங்கானா ஆளுநர் தமிழிசை, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்ட இரங்கல் தெரிவித்தனர்.
மேல் மருவத்தூர் ஆதிபாராசக்தி கோயில் வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தெலங்கானா ஆளுநர் தமிழிசை, உள்ளிட்ட தலைவர்கள் மற்றும் ஏராளமான பாஜகவினர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
மேலும் அங்கு திரண்ட பங்காரு அடிகளாரின் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். இதனைத்தொடர்ந்து அவரது உடல் 21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.