பாகிஸ்தான் பந்தை தெறிக்க விட்ட ஆஸ்திரேலியாவின் தொடக்க வீரர்கள் டேவிட் வார்னர் மற்றும் மார்ஷ்.
ஒரு நாள் உலகக்கோப்பைத் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்றையப் போட்டி ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெறுகிறது.
இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் பந்துவீச்சை தேர்வு செய்தார். எதற்காக பந்துவீச்சைத் தேர்வுச் செய்தோம் என்று வருந்தும் அளவில் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்கள் சிறப்பான செய்கையை செய்தனர்.
ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர் மற்றும் மிட்செல் மார்ஷ் களமிறங்கினர். ஆரம்பத்தில் இருந்தே இருவரும் அசத்தலாக விளையாடி வந்தனர். திரும்பும் திசையெல்லாம் பௌண்டரிஸும், சிக்சர்களாகவே அடித்து பாகிஸ்தான் பந்தை பறக்க விட்டனர்.
பாகிஸ்தான் வீரர்கள் இவர்களின் ஜோடியை பிரிக்க எவ்வளவோ முயற்சி செய்து பார்த்தனர் ஆனால் அவர்களுக்கு கிடைத்ததோ 4, 6 ரன்கள் மட்டுமே. இது ஒரு பக்கம் இருக்க பாகிஸ்தான் அணிக்கு மற்றொரு வேதனை அளிக்கும் செயல் என்றால் இந்தப் போட்டியில் பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள் 25 ரன்களை ஆஸ்திரேலிய அணிக்கு எக்ஸ்டர்ஸாக வாரி வழங்கியுள்ளனர்.
மேலும் டேவிட் மற்றும் மார்ஷ்யை பிரிக்கும் முயற்சியில் ஈடுபட்ட பாகிஸ்தான் ஒரு வழியாக 34 வது ஓவரில் மார்ஷின் விக்கெட்டை எடுத்தது. மிட்செல் மார்ஷ் 10 பௌண்டரீஸ் மற்றும் 9 சிக்சர்கள் அடித்து 108 பந்துகளில் 121 ரன்களை அடித்து ஆட்டமிழந்தார்.
சின்னசாமி மைதானத்தில் புயல் காற்று சென்றவுடன் சூறாவளி காற்று வந்துவிட்டது போலும், டேவிட் வார்னரின் ஒவ்வொரு அடியும் பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களை மிரளவைத்தது. பின்பு இறுதியாக 42 வது ஓவரில் டேவிட் வார்னர் 14 பௌண்டரீஸ் மற்றும் 9 சிக்சர்கள் என 124 பந்துகளில் 163 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.
இறுதியாக ஆஸ்திரேலிய அணியின் ஸ்கோர் 367 ஆகா இருந்தது.