ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றையப் போட்டியில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி பேட்டிங் தேர்வு.
ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. அதில் இன்றையப் போட்டி லக்னோ மைதானத்தில் நெதர்லாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே நடைபெறுகின்றது.
இதில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணியின் தலைவர் ஸ்காட் எட்வர்ட் பேட்டிங்யை தேர்வு செய்துள்ளார். மேலும் இன்றைய நாளில் இரண்டு போட்டிகள் நடைபெறயுள்ளது.
அடுத்தப்போட்டி 2 மணியளவில் தென் ஆப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெறவுள்ளது.
இலங்கை அணியின் வீரர்கள் :
பதும் நிஸ்ஸங்க, குசல் பெரேரா, குசல் மெண்டிஸ் (தலைவர்), சதீர சமரவிக்ரம, சரித் அசலங்கா, தனஞ்சய டி சில்வா, சாமிக்க கருணாரத்ன, துனித் வெல்லலகே, மஹீஷ் தீக்ஷன, மதீஷ பத்திரன, டில்ஷான் மதுஷங்க.
நெதர்லாந்து அணியின் வீரர்கள் :
விக்ரம்ஜித் சிங், மேக்ஸ் ஓ’டவுட், கொலின் அக்கர்மேன், பாஸ் டி லீடே, தேஜா நிடமனூரு, ஸ்காட் எட்வர்ட்ஸ் ( தலைவர் ) , சைப்ரண்ட் ஏங்கல்பிரெக்ட், ரோலோஃப் வான் டெர் மெர்வே, ரியான் க்ளீன், ஆர்யன் தத், பால் வான் மீகெரென்.