காவல்துறை தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக அக்டோபர் 21 ஆம் தேதியன்று ஒவ்வொரு வருடமும் காவல்துறை நினைவு தினம் அனுசரிக்கப்படுகின்றது.
1959 ஆம் ஆண்டு அக்டோபர் 21 ஆம் தேதி இந்தியா-சீனா எல்லைகளுக்கு இடையே பெரும் போர் நடைபெற்றது. அன்று லடாக்கில் 20 ராணுவ வீரர்கள் மீது சீனா துப்பாக்கிச் சூடு நடத்தியது, அதில் 10 இந்திய காவல்துறையினர் உயிரிழந்தனர். உயிரிழந்த காவல்துறையினருக்கு இறுதிச்சடங்கு கிழக்கு லடாக்கில் நடைபெற்றது.
தங்கள் உயிர்களை தியாகம் செய்த 10 காவல்துறை அதிகாரிகளின் தியாகத்தை நினைவு படுத்தும் விதமாக இன்றைய தினம் உள்ளது.
1960 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இந்திய மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களின் காவல்துறை பொது ஆய்வாளர்களின் வருடாந்திர மாநாட்டில் காவல் துறை நினைவு தினம் ஏற்படுத்தப்பட்டது.
2012 ஆம் ஆண்டிலிருந்து டெல்லியில் உள்ள சாணக்கியபுரியில் காவல் துறை நினைவகத்தில் தேசிய அளவிலான காவல்துறை நினைவு தின அணிவகுப்பு நடத்தப்பட்டுக் வருகிறது.
மேலும் இந்த நாளில் நம் தேசத்திற்காக தங்களின் உயிரை தியாகம் செய்த போர் வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவோம்.