ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நேற்றையப் போட்டியில் 62 ரன்கள் விதியஸ்தத்தில் ஆஸ்திரேலியா அபார வெற்றி.
ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்றையப் போட்டி ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது.
இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன் படி முதலில் ஆஸ்திரேலியா அணி பேட்டிங் செய்தது.
ஆஸ்திரேலியா அணியின் தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர் மற்றும் மிட்செல் மார்ஷ் ஆகியோர் களமிறங்கினர். இருவரும் பாகிஸ்தான் அணியின் பந்தை அனல் பறக்க அடித்து நொறுக்கினர். இதில் மிட்செல் மார்ஷ் 10 பௌண்டரீஸ் மற்றும் 9 சிக்சர்களை அடித்து 108 பந்துகளில் 121 ரன்களை எடுத்து 34 வது ஓவரில் அப்ரிடி பந்தில் ஆட்டமிழந்தார்.
அடுத்ததாக களமிறங்கிய கிளென் மேக்ஸ்வெல் டௌக் அவுட் ஆகி அடுத்த பந்திலேயே ஆட்டமிழந்து போனார். இவரைத் தொடர்ந்து களமிறங்கிய ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னருக்கு கம்பெனி கொடுக்க டேவிட் மீண்டும் பௌண்டரீஸ் வேட்டையை தொடங்கினார்.
பின்பு ஸ்டீவ் ஸ்மித் 38 வது ஓவரில் 9 பந்துகளில் 7 ரன்களை அடித்து ஆட்டமிழந்து போனார். அவரை தொடர்ந்து சிறப்பாக விளையாடி கொண்டிருந்த டேவிட் வார்னர் 42 வது ஓவரில் 14 பௌண்டரீஸ் மற்றும் 9 சிக்சர்களை அடித்து 124 பந்துகளில் 163 ரன்களை எடுத்து ஹாரிஸ் பந்தில் ஆட்டமிழந்தார்.
இவரை தொடர்ந்து களத்தில் இறங்கிய வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க 50 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா அணி 9 விக்கெட்கள் இழப்பிற்கு 367 ரன்களை எடுத்தது.
பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள் 25 ரன்களை ஆஸ்திரேலியா அணிக்கு தானமாக வழங்கியுள்ளனர். மேலும் பாகிஸ்தான் அணியில் அதிகபட்சமாக ஷஹீன் அப்ரிடி 5 விக்கெட்களை வீழ்த்தி அசத்தியுள்ளார். ஹரிஸ் ரவூப் 3 விக்கெட்களும் உசாமா மிர் ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.
இதனை தொடர்ந்து 368 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்கள் அப்துல்லா ஷபீக் மற்றும் இமாம்-உல்-ஹக் களமிறங்கினர்.
இருவரும் சிறப்பாக விளையாடி வந்த நிலையில் 21 வது ஓவரில் அப்துல்லா 61 பந்துகளில் 64 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்த 2 ஓவர்களிலேயே இமாம்-உல்-ஹக் 71 பந்துகளில் 70 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.
இவர்களை தொடந்து களமிறங்கிய பாபர் ஆசாம் 14 பந்துகளில் 18 ரன்களோடு ஆட்டமிழந்து போனார். அடுத்து களமிறங்கிய முகமது ரிஸ்வான் மற்றும் சவுத் ஷகீல் அணிக்கு நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்ந்தனர். இதில் முகமது ரிஸ்வான் 40வது ஓவரில் 40 பந்துகளில் 46 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். சவுத் ஷகீல் 31 பந்துகளுக்கு 30 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இருந்தியாக பாகிஸ்தான் அணி 45 வது ஓவரில் 305 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து தோல்வியடைந்தது.
ஆஸ்திரேலியா அணியின் அதிகபட்சமாக ஆடம் ஜம்பா 4 விக்கெட்களும், பாட் கம்மின்ஸ் மற்றும் மார்கஸ் ஸ்டோனிஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்களும், ஜோஷ் ஹேசில்வுட் மற்றும் மிட்செல் ஸ்டார்க் ஆகியோர் தலா 1 விக்கெட்களும் வீழ்த்தினர்.
இதனால் ஆஸ்திரேலிய அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிப் பெற்றது.