அமலாக்கத் துறை வலையில் உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளை சிக்கியுள்ளதாக, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், திமுக பைல்ஸ் வெளியிட்ட போது நோபல் ஸ்டீல் நிறுவனத்தின் 1,000 கோடி ரூபாய் முதலீடு குறித்த கேள்வியை எழுப்பியிருந்தோம்.
முதலீடும் வரவில்லை முறைகேடான முதலீடு என்று எழுப்பப்பட்ட குற்றச்சாட்டுக்கு இன்று வரை பதிலும் வரவில்லை.
முறைகேடான பணப்பரிவர்த்தனை மேற்கொண்ட உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளை அமலாக்கத் துறையிடம் சிக்கியுள்ளது.
நோபல் ப்ரிக்ஸ் நிறுவனம் இயங்கி வந்த அதே விலாசத்தில் உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளை இயங்கி வருகிறது. இந்த இரு நிறுவனங்களுக்கு உள்ள தொடர்பு என்ன?
இதற்காவது பதில் வருமா? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுவரை, தமிழக அரசியல் நிலவரம் குறித்து, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சொல்லியது எல்லாமே நடந்துள்ளது. அதுபோல, உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளை அமலாக்கத் துறையிடம் சிக்கியுள்ள விவகாரமும் விஸ்வரூபம் எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால், இந்த பதிவை மே 28-ம் தேதியே அண்ணாமலை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.