சொத்து குவிப்பு உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகளில் சிக்கியுள்ள திமுகவைச் சேர்ந்த தமிழக அமைச்சர்கள் மீதான வழக்குகளை சிபிஐ வசம் மாற்ற வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
புது டெல்லியில் உள்ள உச்ச நீதிமன்றத்தில், கருப்பையா என்பவர் ஒரு மனுத் தாக்கல் செய்துள்ளார். அதில், தமிழகத்தில் தற்போது அமைச்சர்களாக உள்ள ஐ.பெரியசாமி, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் மீது சொத்து குவிப்பு உள்ளிட்ட பல்வேறு முறைகேடு வழக்குகள் உள்ளன.
தமிழகத்தில் திமுக ஆட்சி ஏற்பட்ட உடன் அவர்கள் மீதான வழக்குகளின் பிடி தளர்ந்து வருகிறது. மேலும், சிலர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
எனவே, தமிழக அமைச்சர்கள் மீதான வழக்குகளைத் தமிழக காவல்துறை தரப்பிலிருந்து சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் எனத் தெரிவித்திருந்தார்.
இந்த மனு நீதிபதி சூரிய காந்த் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இது தொடர்பாகப் பதில் அளிக்குமாறு தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார். மேலும், இந்த வழக்கை 4 வாரங்களுக்குத் தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
தமிழக அமைச்சர்கள் மீதான வழக்குகள் சிபிஐ வசம் சென்றால், வழக்குகள் நேர்மையாக நடக்கும். இதனால், சட்டத்தின் பிடியில் இருந்து ஒரு காலும் தப்பிக்கவே முடியாது என்பதால், சம்பந்தப்பட்ட திமுக பிரபலங்கள் பீதியில் உறைந்துபோய் உள்ளனர்.