பாதுகாப்புக் காரணங்களுக்காக அல் ஜசீரா தொலைக்காட்சி ஒளிபரப்பை மூடுவதற்கான அவசரகால விதிமுறைகளுக்கு இஸ்ரேல் ஒப்புதல் அளித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ஹமாஸ் மீதான தாக்குதல் தீவிரம் அடைந்து வரும் நிலையில், அல் ஜசீரா செய்தி சேனலை தற்காலிகமாக மூடுவதற்கு அனுமதிக்கும் புதிய விதிமுறைகளுக்கு இஸ்ரேல் அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய இஸ்ரேல் தகவல் தொடர்பு அமைச்சர் ஷ்லோமோ கர்ஹி அரசின் பாதுகாப்பிற்கு தீங்கு விளைவிக்கும் எந்த வகை ஒளிபரப்புகளை அனுமதிக்க மாட்டோம் என தெரிவித்துள்ளார்.
அல் ஜசீரா தொலைக்காட்சி ஹமாஸ்-ஐஎஸ்ஐஎஸ் மற்றும் பயங்கரவாத அமைப்புகளின் பிரச்சாரத்திற்கு உதவுகிறது என கூறியுள்ளார். மேலும் இஸ்ரேலுக்கு எதிரான வன்முறையை ஊக்குவிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.