டெல்லியில் கங்கனா ரனாவத் நடித்த தேஜாஸ் திரைப்படம் சிறப்பு காட்சி திரையிடப்படயுள்ளது.
பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடிப்பில், ரோனி ஸ்க்ரூவாலா நிறுவனம் தயாரிப்பில், சர்வேஷ் மேவாரா இயக்கத்தில் அக்டோபர் 27 ஆம் தேதி வெளியாகியுள்ள திரைப்படம் தேஜஸ்.
கடந்த அக்டோபர் 8 ஆம் தேதி இந்தப் திரைப் படத்தின் ட்ரைலர் வெளியானது. இந்த படத்தில் நடிகை கங்கனா ரனாவத் விமானப்படை விமானியாக நடித்துள்ளார். இந்த திரைப்படத்தின் கதைக்களம் தேஜஸ் என்ன இந்திய போர் விமானத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த படம் அக்டோபர் 27 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இன்று படத்தின் சிறப்பு காட்சிகள் வெளியிடப்படவுள்ளது.
இந்த சிறப்பு காட்சி பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் பல இந்திய விமானப்படை அதிகாரிகளுக்கு டெல்லியில் திரையிடவுள்ளது.
இன்று நடிகை கங்கனா ரனாவத் மும்பை செல்வதற்காக மும்பை விமான நிலையத்திற்கு சென்றார். அப்போது அவர் தேஜஸ் படத்தின் சிறப்பு கட்சி திரையிடப்படுவதை குறித்து பேசியுள்ளார்.
இதுக்குறித்து அவர், ” இன்று நாங்கள் ஒரு சிறப்பு நிகழ்ச்சிக்காக செல்கிறோம், பாதுகாப்பு துறை அமைச்சர் மற்றும் இந்திய விமானப்படை அதிகாரிகளுக்கு தேஜஸ் படத்தை டெல்லியில் திரையிடவுள்ளோம். எங்களின் தேஜஸ் படம் வெற்றிப் பெற இறைவனிடம் பிராத்தனை செய்யுங்கள். எல்லாம் நன்றாக நடைபெறும் என்று நம்புகிறேன் ” என்று கூறினார்.