கேரளாவில் அகில் பாரதிய வித்யார்த்தி பரிஷத் பெண் ஊழியரை எஸ்எப்ஐ இயக்கத்தினர் அறையில் அடைத்து வைக்கப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 16ஆம் தேதி கண்ணூர் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் அகில் பாரதிய வித்யார்த்தி பரிஷத் பெண் ஊழியர் ஆராதனா என்பவர் ஏபிவிபி உறுப்பினர் படிவங்களை வினியோகித்துள்ளார்.
அப்போது அங்கு வந்த எஸ்எஃப்ஐ (SFI) இயக்கத்தினர் அவரை தாக்கியும், கைகளில் கட்டப்பட்டிருந்த ராக்கியை கழட்டுமாறு கூறியும் அறையில் அடைத்து வைத்துள்ளனர்.
மேலும் வருத்தம் தெரிவித்து கடிதம் எழுதி தருமாறும் அவர்கள் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக தான் அனுபவித்த சித்திரவதைகள் குறித்து கல்லூரி முதல்வரிடம் ஆராதனா புகார் அளித்துள்ளார்.