மாநிலத் தலைவர் அண்ணாமலை அவர்களின் இல்லத்தின் முன்பு உள்ள கொடிக்கம்பத்தை அகற்றக்கூடாது என்று போராடிய, தமிழக பாஜக இளைஞன் நலன் மேம்பாட்டுப் பிரிவின் மாநில தலைவர் அமர் பிரசாத் ரெட்டி தமிழக காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு தாம்பரம் நீதிமன்றத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.
சென்னை பனையூரில் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் இல்லத்தின் முன்பு இருந்த கொடிக் கம்பத்தை அகற்ற வேண்டும் என காவல் துறையினர் தீவிரம் காட்டினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில், பாஜக தொண்டர் ரத்தம் சிந்தச் சிந்தக் காவல்துறையினரால் தூக்கிச் செல்லப்பட்டார். மேலும், பலரை காவல்துறை கைது செய்தனர்.
இந்த நிலையில், மாநிலத் தலைவர் அண்ணாமலை பனையூர் இல்லத்தின் முன்பு உள்ள கொடிக்கம்பத்தை அகற்றக்கூடாது என்று தமிழக பாஜகவின் விளையாட்டு மற்றும் இளைஞன் நலன் மேம்பாட்டுப் பிரிவின் மாநில தலைவர் அமர் பிரசாத் ரெட்டி போராடியதாகவும், இதனால், தமிழக காவல்துறையினரால் அவர் கைது செய்யப்பட்டு உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.