இங்கிலாந்து பந்துவீச்சாளர்களை அடித்து நொறுக்கிய தென் ஆப்பிரிக்கா வீரர்கள்.
ஒரு நாள் உலகக்கோப்பைத் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. அதில் இன்றையப் போட்டி மும்பையில் தென் ஆப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது.
இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங் செய்தது.
தென் ஆப்பிரிக்கா அணியின் தொடக்க வீரர்களாக குயின்டன் டி காக் மற்றும் ரீசா ஹென்ட்ரிக்ஸ் ஆகியோர் களமிறங்கினர். இதில் குயின்டன் டி காக் முதல் ஓவரின் முதல் பந்தை பௌண்டரியாக அடிக்க, இரண்டாம் பந்தில் ஆட்டமிழந்தார்.
இவரை அடுத்து ராஸ்ஸி வான் டெர் டுசென் களமிறங்கினார். ரீசா ஹென்ட்ரிக்ஸ் மற்றும் ராஸ்ஸி வான் டெர் டுசென் இணை சிறப்பாக விளையாடி வந்தது. பின்னர் 20 வது ஓவரில் ராஸ்ஸி வான் டெர் டுசென் 8 பௌண்டரீஸ் அடித்து மொத்தமாக 61 பந்துகளில் 60 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.
ரீசா ஹென்ட்ரிக்ஸ் 9 பௌண்டரீஸ் மற்றும் 3 சிக்சர்கள் அடித்து மொத்தமாக 75 பந்துகளில் 85 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். இவர்களை தொடர்ந்து ஐடன் மார்க்ராம் மற்றும் ஹென்ரிச் கிளாசென் களமிறங்கினர்.
இதில் ஐடன் மார்க்ராம் 44 பந்துகளில் 42 ரன்களை அடித்து ஆட்டமிழந்தார். ஹென்ரிச் கிளாசென் 12 பௌண்டரீஸ் மற்றும் 4 சிக்சர்கள் என மொத்தமாக 67 பந்துகளில் 109 ரன்களை அடித்து ஆட்டமிழந்தார்.
பின்பு களமிறங்கிய மார்கோ ஜான்சன் அதிரடியாக விளையாடி 3 பௌண்டரீஸ் மற்றும் 6 சிக்சர்கள் அடித்து மொத்தமாக 42 பந்துகளில் 75 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.
இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக ரீஸ் டோப்லி 3 விக்கெட்களும், கஸ் அட்கின்சன் மற்றும் அடில் ரஷித் ஆகியோர் தலா 2 விக்கெட்களும் எடுத்துள்ளனர்.
50 ஓவர்கள் முடிவில் தென் ஆப்பிரிக்கா அணி 7 விக்கெட்கள் இழப்பிற்கு 399 ரன்கள் எடுத்துள்ளது. இங்கிலாந்து அணி வெற்றி பெற 400 ரன்கள் இலக்காக உள்ளது.