ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இன்றையப் போட்டியில் இலங்கை அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றுள்ளது.
ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. அதில் இன்றையப் போட்டி லக்னோ மைதானத்தில் நெதர்லாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே நடைபெற்றது.
இதில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணியின் தலைவர் ஸ்காட் எட்வர்ட் பேட்டிங்யை தேர்வு செய்தார்.
அதன்படி நெதர்லாந்து அணியின் தொடக்க வீரர்களாக விக்ரம்ஜித் சிங் மற்றும் மேக்ஸ் ஓ’டவுட் களமிறங்கினர். இதில் 3 வது ஓவரில் விக்ரம்ஜித் சிங் 4 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அடுத்ததாக கொலின் அக்கர்மேன் களமிறங்கினார், 9 வது ஓவரில் மேக்ஸ் ஓ’டவுட் 27 பந்துகளில் 16 ரன்களை எடுத்து ஆட்டமிழக்க அடுத்த 2 ஓவர்களில் கொலின் அக்கர்மேன் 31 பந்துகளில் 29 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த வீரர்களும் அடுத்தடுத்து ஆட்டமிழக்க 21 வது ஓவரில் நெதர்லாந்து அணியின் ஸ்கோர் 6 விக்கெட்கள் இழப்பிற்கு 91 ரன்களாக இருந்தது.
இதனை அடுத்து நெதர்லாந்து அணிக்கு நம்பிக்கை நட்சத்திரமாக சைப்ரண்ட் ஏங்கல்பிரெக்ட் மற்றும் லோகன் வான் பீக் ஆகியோர் களமிறங்கினர்.
இதில் சைப்ரண்ட் ஏங்கல்பிரெக்ட் 41 வது ஓவரில் 82 பந்துகளில் 70 ரன்களையும், லோகன் வான் பீக் 75 பந்துகளில் 59 ரன்களையும் அடித்து ஆட்டமிழந்தது.
இலங்கை அணியில் அதிகபட்சமாக தில்ஷான் மதுஷங்க மற்றும் கசுன் ராஜித ஆகியோர் தலா 4 விக்கெட்களை வீழ்த்தினர். மகேஷ் தீக்ஷனா ஒரு விக்கெட்டை எடுத்தார். இதனால் 49.4 ஓவர்களில் நெதர்லாந்து அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 262 ரன்களை எடுத்தது.
இதைத் தொடர்ந்து 263 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணியின் தொடக்க வீரர்கள் பத்தும் நிஸ்ஸங்கா மற்றும் குசல் பெரேரா களமிறங்கினர்.
இதில் 4 வது ஓவரில் குசல் பெரேரா 5 ரன்களுக்கு ஆட்டமிழக்க அவரைத் தொடர்ந்து குசல் மெண்டிஸ் களமிறங்கினார். 9 வது ஓவரில் குசல் மெண்டிஸ் 11 ரன்களுக்கு ஆட்டமிழக்க அவரைத் தொடர்ந்து சதீர சமரவிக்ரம களமிறங்கினார்.
பத்தும் நிஸ்ஸங்கா மற்றும் குசல் மெண்டிஸ் இணை சிறப்பாக விளையாடி வந்த நிலையில் 16 வது ஓவரில் பத்தும் நிஸ்ஸங்கா 9 பௌண்டரீஸ் அடித்து மொத்தமாக 52 பந்துகளில் 54 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.
அவரை தொடர்ந்து சரித் அசலங்கா களமிறங்கினார். சிறப்பாக விளையாடி 2 பௌண்டரீஸ் மற்றும் 1 சிக்சர் அடித்து 32 வது ஓவரில் 66 பந்துகளுக்கு 44 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இறுதி வரை சதீர சமரவிக்ரம ஆட்டமிழக்காமல் 107 பந்துகளில் 91 ரன்களை எடுத்து அணியை வெற்றி பெற செய்தார். 48 வது ஓவரில் இலங்கை அணி 5 விக்கெட்கள் 263 ரன்களை எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பை தக்க வைத்து கொண்டது.