தென்மேற்கு அரபிக் கடலில் ‘தேஜ்’ புயல் உருவானதாக இந்தியா வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
கடந்த 19ம் தேதி தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவியது. பின்னர் இது நேற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது.
தற்போது தென்மேற்கு அரபிக் கடலில் ‘தேஜ்’ புயல் உருவானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புயல் அடுத்த 12 மணி நேரத்தில் தீவிர புயலாக மாறக்கூடும் மேலும் 24 மணி நேரத்தில் மிக தீவிர புயலாக வலுப்பெறக்கூடும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த புயலினால் முதலில் குஜராத்திற்கு எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் தற்போது ஓமன் நோக்கி நகருவதால் குஜராத்துக்கு பாதிப்பில்லை என்றும் குஜராத்தில் அடுத்த 7 நாள்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.