அரசு மருத்துவமனைகளில் அடிப்படை வசதிகள் முறையாக இல்லை என்றும், இதனால் பல உயிர்கள் பறிபோவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது தொடர்பாக தமிழக பாஜக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் சுகாதாரத்துறையில் தொற்றுநோயை போல் முறைகேடுகள் தொடர்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழக மருத்துவமனைகளில் நடைபெறும் சீர்கேடு, சிகிச்சை சரியாக கிடைக்காததால் பறிபோன உயிர்கள் தொடர்பான விவரங்கள் அந்த வீடியோவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேபோல் நீட் தேர்வு தொடர்பாக திமுக அரசு அளிக்கும் பொய்யான வாக்குறுதி, மற்றும் சென்னையில் செவிலியர் போராட்டம் உள்ளிட்டவை விரிவாக விவரிக்கப்பட்டுள்ளன.