இங்கிலாந்து மோசமான பேட்டிங் - தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி !
Oct 26, 2025, 06:51 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home விளையாட்டு

இங்கிலாந்து மோசமான பேட்டிங் – தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி !

ஒரு நாள் உலகக்கோப்பைத் தொடரின் நேற்றையப் போட்டியில் 229 ரன்களை வித்தியாசத்தி தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி.

Web Desk by Web Desk
Oct 22, 2023, 11:49 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஒரு நாள் உலகக்கோப்பைத் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. அதில் நேற்றையப் போட்டி மும்பையில் தென் ஆப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங் செய்தது.

தென் ஆப்பிரிக்கா அணியின் தொடக்க வீரர்களாக குயின்டன் டி காக் மற்றும் ரீசா ஹென்ட்ரிக்ஸ் ஆகியோர் களமிறங்கினர். இதில் குயின்டன் டி காக் முதல் ஓவரின் முதல் பந்தை பௌண்டரியாக அடிக்க, இரண்டாம் பந்தில் ஆட்டமிழந்தார்.

இவரை அடுத்து ராஸ்ஸி வான் டெர் டுசென் களமிறங்கினார். ரீசா ஹென்ட்ரிக்ஸ் மற்றும் ராஸ்ஸி வான் டெர் டுசென் இணை சிறப்பாக விளையாடி வந்தது. பின்னர் 20 வது ஓவரில் ராஸ்ஸி வான் டெர் டுசென் 8 பௌண்டரீஸ் அடித்து மொத்தமாக 61 பந்துகளில் 60 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.

ரீசா ஹென்ட்ரிக்ஸ் 9 பௌண்டரீஸ் மற்றும் 3 சிக்சர்கள் அடித்து மொத்தமாக 75 பந்துகளில் 85 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். இவர்களை தொடர்ந்து ஐடன் மார்க்ராம் மற்றும் ஹென்ரிச் கிளாசென் களமிறங்கினர்.

இதில் ஐடன் மார்க்ராம் 44 பந்துகளில் 42 ரன்களை அடித்து ஆட்டமிழந்தார். ஹென்ரிச் கிளாசென் 12 பௌண்டரீஸ் மற்றும் 4 சிக்சர்கள் என மொத்தமாக 67 பந்துகளில் 109 ரன்களை அடித்து ஆட்டமிழந்தார்.

பின்பு களமிறங்கிய மார்கோ ஜான்சன் அதிரடியாக விளையாடி 3 பௌண்டரீஸ் மற்றும் 6 சிக்சர்கள் அடித்து மொத்தமாக 42 பந்துகளில் 75 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக ரீஸ் டோப்லி 3 விக்கெட்களும், கஸ் அட்கின்சன் மற்றும் அடில் ரஷித் ஆகியோர் தலா 2 விக்கெட்களும் எடுத்துள்ளனர்.

50 ஓவர்கள் முடிவில் தென் ஆப்பிரிக்கா அணி 7 விக்கெட்கள் இழப்பிற்கு 399 ரன்கள் எடுத்துள்ளது.

இதை தொடர்ந்து 400 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணயின் தொடக்க வீரர்கள் ஜானி பேர்ஸ்டோவ் மற்றும் டேவிட் மாலன் களமிறங்கினர். இதில் ஜானி பேர்ஸ்டோவ் 2 வது ஓவரில் 10 ரன்களுக்கும், அடுத்து களமிறங்கிய ஜோ ரூட் 3 வது ஓவரில் 2 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர்.

பின்பு களமிறங்கிய வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க கஸ் அட்கின்சன் மற்றும் மார்க் வூட் இணை அணியின் ஸ்கோரை உயர்த்தியது. இதில் அட்கின்சன் 35 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க மார்க் வூட் 43 ரன்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தது.

இதனால் இங்கிலாந்து அணி 22 வது ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 170 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.

தென் ஆப்பிரிக்கா அணியில் அதிகபட்சமாக ஜெரால்ட் கோட்ஸி 3 விக்கெட்களும், மார்கோ ஜான்சன் மற்றும் லுங்கி என்கிடி தலா 2 விக்கெட்களும், ககிசோ ரபாடா மற்றும் கேசவ் மகாராஜ் தலா 1 விக்கெட்களும் வீழ்த்தினர்.

இதனால் தென் ஆப்பிரிக்கா அணி 229 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது. இந்தப் போட்டியில் ஆட்டநாயகன் விருது 67 பந்துகளில் 109 ரன்களை அடித்த ஹென்ரிச் கிளாசென்னுக்கு வழங்கப்பட்டது.

Tags: world Cup Cricketengland vs south africa
ShareTweetSendShare
Previous Post

திருவிழாவில் பட்டாசு வெடி விபத்து !

Next Post

நேபாளத்தில் நிலநடுக்கம்..!

Related News

சர்வதேச அரசியலை உலுக்கும் சுயசரிதை : பலாத்காரம் செய்த பிரதமர் யார்? – எப்ஸ்டீனின் வழக்கில் சிக்கிய பெண் வெளியிட்ட “ஷாக்”!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி – இநதியா வெற்றி!

அமெரிக்காவை முந்தும் சீனா : மிகப்பெரிய ராணுவ போக்குவரத்து விமானம் வடிவமைப்பு!

இந்தியாவை தொடர்ந்து ஆப்கனிஸ்தானும் அதிரடி : பாகிஸ்தானுக்குள் பாயும் நதியின் குறுக்கே அணை கட்ட முடிவு!

தீஸ்தா நதிநீர் பிரச்னையில் மாஸ்டர் பிளான் : சீனா-வங்கதேசம் கைகோர்ப்பு – இந்தியாவை பாதிக்குமா?

கண்டுபிடிப்பது கஷ்டமாம் : பிரான்சில் கொள்ளை போன நெப்போலியன் கால நகைகள்!

Load More

அண்மைச் செய்திகள்

டெல்டா விவசாயிகள் இன்னல்களுக்கு முதல்வரே காரணம் – நயினார் நாகேந்திரன்

நாமக்கல் நகரில் தனியார் அரிசி அரவை ஆலையில் மத்திய குழு ஆய்வு

ஆம்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கன மழை!

நாளை உருவாகிறது மோந்தா புயல் – சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

Apple, NVidia-வில் பணியாற்ற விருப்பமா? : IIT, IIM படிக்க தேவையில்லை திறமை போதுமாம் – சிறப்பு தொகுப்பு!

திருப்பத்தூர் நாட்றம்பள்ளி அருகே வேல் பூஜை செய்த விஷ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகிகள் கைது!

கிருஷ்ணகிரியில் பாஜக இளைஞரணி சார்பில் வேலை வாய்ப்பு முகாம் – சுமார் 100 பேருக்கு பணி ஆணை!

50 % மட்டுமே நடைபெற்ற குறுவை நெல் சாகுபடி கொள்முதல் – முழு விவரம்!

பாமக செயல் தலைவராக காந்திமதி நியமனம் – டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

டிடிவி தினகரன் காலாவதியான அரசியல்வாதி – ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies