ஒருவர் பேசும்போது தொடர்ந்து பேச முடியாமல் இடையில் திக்கிதிக்கி பேசுவது திக்குவாய் என்று கூறப்படுகிறது. ஆனால் ஒவ்வொருவர் திக்குவதும் வெவ்வேறு மாதிரியாக இருக்கும். இந்த பிரச்சனை உள்ளோர் நிறைய விதத்தில் பாதிக்கப்படுவதுண்டு, ஆகையால் இதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த சர்வதேச திக்குவாய் விழிப்புணர்வு தினம் ஆண்டுதோறும் அக்டோர் 22ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது.
20ம் நூற்றாண்டின் மத்தியில் திக்கி திக்கி பேசுபவர்கள் ஒன்று சேர்ந்து திக்குவாய் பிரச்னையால் சிரமப்படுவோர் ஒருவருக்கு ஒருவர் உதவிக்கொள்ளும் வகையிலும், ஆதரவு தெரிவிக்கும் விதமாகவும் சுய உதவிக்குழுக்களை அமைத்துக்கொண்டார்கள். அவர்களின் அனுபவங்கள் மற்றும் உணர்வுகளை பகிர்ந்து ஒருவருக்கொருவர் ஆறுதலாக இருந்தார்கள்.
திக்குவாய் குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள். 1995ம் ஆண்டு சர்வதேச திக்குவாய் சங்கம் உருவானது. அந்த சங்கத்தின் நோக்கம், திக்குவாய் பிரச்சனையால் அவதி படுவோர்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகும்.
1998ம் ஆண்டு இந்த சங்கம் அதிகாரப்பூர்வமாக சர்வதேச திக்குவாய் விழிப்புணர்வு நாளை அறிவித்தது. அதன்படி, அக்டோபர் 22ம் தேதி திக்குவாய் பிரச்சனை உள்ள ஆங்கில எழுத்தாளர் ஜார்ஜ் பெர்ணாட்ஷாவின் பிறந்த நாளை சர்வதேச திக்குவாய் விழிப்புணர்வு தினமாக அறிவித்தது.
பெர்ணாட்ஷாவின் இந்த பிரச்சனை அவர் சாதிக்க ஒரு போதும் தடையாக இருந்ததில்லை என்பதை உணர வைப்பதற்காகவே அவரின் பிறந்தநாளை திக்குவாய் விழிப்புணர்வு தினமாக அறிவிக்கப்பட்ட்டது.
மேலும் கல்வி நிகழ்ச்சிகள், மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்துவது, கருத்தரங்கள் நடத்துவது, திக்குவாயின் பல்வேறு பரிணாமங்கள் குறித்து விளக்குவது, அதற்கான காரணங்கள் மற்றும் சிகிச்சைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இந்த நாளின் முக்கியத்துவம் ஆகும்.