ஒரு நாள் உலகக்கோப்பை தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்றையப் போட்டி தர்மசாலாவில் உள்ள இமாச்சல பிரதேச கிரிக்கெட் சங்க மைதானத்தில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது.
இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன் படி நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது.
இதில் இந்திய பந்துவீச்சாளர் முகமது ஷமி இந்த உலகக்கோப்பை தொடரில் இன்றைய போட்டியில் தான் முதன்முதலாக களமிறங்குகிறார்.
தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொள்ள நினைத்த ஷமி மிகச்சிறப்பாக இந்த வாய்ப்பை பயன்படுத்தி உள்ளார் என்று தான் சொல்லவேண்டும்.
இந்தப் போட்டியில் 8 வது ஓவரில் பந்துவீச வந்து ஷமி அந்த ஓவரில் முதல் பந்தில் வில் எங்கின் விக்கெட்டை வீழ்த்தினார். அதன் பின் நியூசிலாந்து வீரர்கள் சிறப்பாக விளையாடி ரன்களை குவித்து வந்தனர்.
அப்போது மிகவும் சிறப்பாக விளையாடி வந்த ரச்சின் ரவீந்திராவை 33 வது ஓவரில் வீழ்த்தினார். அதன் பின் மிட்செல் சான்ட்னர்ரை 1 ரன்னிலும், மாட் ஹென்றியை டொக் அவுட்டும் ஆக்கினார்.
கடைசி விக்கெட்டாக சிறப்பாக விளையாடி சதம் அடித்த டேரில் மிட்செல்லை வீழ்த்தினார். மொத்தமாக முகமது ஷமி 10 ஓவர்கள் பந்துவீசி 54 ரன்களை கொடுத்து 5 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.