தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தொண்டர்கள் மீது திமுக அரசு, மேற்கொண்டு வரும் பழி வாங்கும் நடவடிக்கைகளை ஆய்வு செய்ய பாஜக தலைமை 4 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளது.
மத்திய பாஜக தலைமை, தமிழகத்தில் 4 பேர் கொண்ட உயர்மட்ட குழுவை அமைத்துள்ளது. இந்த குழுவில், மத்திய பிரதேச முன்னாள் முதலமைச்சர் சதானந்த கௌவுடா, மும்பை முன்னாள் காவல்துறை ஆணையர் சத்ய பால் சிங், ஆந்திர பிரதேச பாஜக தலைவர் புரந்தேஸ்வரி, பி.சி.மோகன் எம்.பி. ஆகிய 4 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் அனைவரும், தமிழகத்தில் பாஜகவுக்கு எதிராக செயல்படும் திமுக மற்றும் திமுக அரசு மீது விசாரணை செய்து, அறிக்கையை மத்திய தலைமைக்கு வழங்க உள்ளனர்.