ஒரு நாள் உலகக்கோப்பைத் தொடர் நேற்றையப் போட்டியில் இந்தியா 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது.
ஒரு நாள் உலகக்கோப்பைத் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்றையப் போட்டி தர்மசாலாவில் உள்ள இமாச்சல பிரதேச கிரிக்கெட் சங்க மைதானத்தில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்றது.
இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன் படி நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது.
நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக டெவோன் கான்வே மற்றும் வில் யங் களமிறங்கினர். இதில் டெவோன் கான்வே 3 வது ஓவரில் ஒரு ரன் கூட எடுக்காமல் சிராஜ் பந்தில் டௌக் ஆகி சென்றார். அடுத்து ரச்சின் ரவீந்திரன் களமிறங்கி சிறப்பாக விளையாடி வந்தார்.
8 வது ஓவரில் வில் யங் 27 பந்துகளில் 17 ரன்களுடன் ஷமியின் பந்தில் ஆட்டமிழந்து போனார். இவரை தொடர்ந்து டேரில் மிட்செல் களமிறங்கினார். ரச்சின் ரவீந்திரா மற்றும் மிட்செல் கூட்டணி சிறப்பாக செயல்பட்டு வந்தது.
இவர்கள் இருவரும் பௌண்டரீஸ் மற்றும் சிக்சர்களை அடித்து வெளுத்தனர். இந்திய அணி எவ்வளவு முயற்சி செய்தும் இவர்களின் ஜோடியை பிரிக்க முடியாமல் இருந்தது. அந்த சமயத்தில் ஷமி வீசிய பந்தை ரச்சின் ரவீந்திரா தூக்கி அடிக்க முயற்சி செய்து அந்த பந்து சுப்மன் கில் கைக்கு சென்றது ஆதலால் ரவீந்திரா 75 ரன்களுக்கு ஆட்டமிழந்து சென்றார்.
அடுத்து களமிறங்கிய டாம் லதாம் 5 ரன்களுக்கு குலதீப் யாதவின் பந்தில் ஆட்டமிழக்க, அடுத்தடுத்து களமிறங்கிய வீரர்களும் ஆட்டமிழந்து சென்றனர். இறுதியாக 49 வது ஓவரில் டேரில் மிட்செல் ஷமி போட்ட பந்தை தூக்கி அடிக்க அந்த பந்து விராட் கோலியின் கைக்கு சென்றதால் 130 ரன்களோடு ஆட்டமிழந்து சென்றார்.
50 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 273 ரன்களை எடுத்தது.
இந்திய அணியின் ஷமி தான் வீசிய முதல் மற்றும் கடைசி பந்துகளில் விக்கெட்களை எடுத்து மொத்தமாக 5 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். குலதீப் யாதவ் 2 விக்கெட்களும், பும்ரா மற்றும் சிராஜ் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளனர்.
இதைத் தொடர்ந்து 274 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ரோஹித் சர்மா மற்றும் சுப்மன் கில் களமிறங்கினர்.
இருவரும் சிறப்பாக விளையாடி பௌண்டரீஸ் மற்றும் சிக்சர்களாக அடித்து வந்தனர். இருவரின் இணை 50 ரன்களை தாண்டியது. இந்த நிலையில் 11 வது ஓவரில் ரோஹித் சர்மா 4 பௌண்டரீஸ் மற்றும் 4 சிக்சர்கள் என மொத்தமாக 40 பந்துகளில் 46 ரன்களை அடித்து ஆட்டமிழந்தார்.
இவரைத் தொடர்ந்து 13 வது ஓவரில் சுப்மன் கில் 5 பௌண்டரீஸ் உடன் 31 பந்துகளில் 26 ரன்களை அடித்து ஆட்டமிழந்தார். இவர்களை தொடர்ந்து விராட் கோலி மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் களமிறங்கினர்.
இதில் ஸ்ரேயாஸ் ஐயர் களமிறங்கியது முதலே அடித்த ஒவ்வொரு பந்தும் பௌண்டரி லைனை தொட்டது. அந்த நேரத்தில் மைதானத்தில் பனிமூட்டம் அதிகமாக இருந்ததால் 10 நிமிடம் ஆட்டம் தடைபட்டது. பிறகு ஆட்டம் தொங்கியது.
பின்னர் 21 வது ஓவரில் ஸ்ரேயாஸ் ஐயர் 29 பந்துகளுக்கு 33 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்ததாக களமிறங்கிய கே.எல்.ராகுல் 3 பௌண்டரீஸ் உடன் 35 பந்துகளில் 27 ரன்களுடன் ஆட்டமிழந்தார்.
பின்னர் ஜடேஜா களமிறங்கினர். விராட் மற்றும் ஜடேஜா சற்று பொறுமையாக விளையாடி வந்தனர். இந்திய அணியின் அடுத்து பேட்ஸ்மேன்களும் இல்லை என்ற நிலை வந்தவுடன் இந்திய அணி வெற்றி பெறுமா என்று சந்தேகத்தில் இருந்தனர். நேற்றைய போட்டியில் இரு அணிகளுக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக இருந்தது ஆகையால் போட்டி சற்று கடுமையாகவே சென்றது.
அந்த சமயத்தில் ஜடேஜா ஒரு சிக்சர் அடிக்க வெற்றி வாய்ப்பு இந்தியா பக்கம் திரும்பியது. அப்போது அனைத்து இந்தியர்களின் ஒரே எண்ணம் கோலி சதம் அடிப்பார் என்பதில் தான் இருந்தது. அப்போது விராட் கோலி சதம் அடிக்க 5 ரன்கள் தேவைப்பட்டது. அதுப்போல இந்தியா வெற்றி பெற 5 ரன்கள் தேவைப்பட்டது.
அப்போது விராட் கோலி ஹென்றி போட்ட பந்தை தூக்கி அடிக்க சிக்சர் போகும் ன்று எதிர்பார்த்த சமயத்தில் கேட்ச் பிடித்து விராட் கோலி ஆட்டமிழந்தார். பின்னர் ஜடேஜா ஒரு பௌண்டரி அடித்து இந்திய அணியை வெற்றிபெற செய்ததார். இதில் ஜடேஜா 44 பந்துகளில் 39 ரன்களை அடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். விராட் கோலி 95 ரன்களில் ஆட்டமிழந்தார்.
நியூசிலாந்து அணியில் அதிகபட்சமாக பெர்குசன் 2 விக்கெட்களும் மிட்செல் சான்ட்னர், டிரெண்ட் போல்ட், மாட் ஹென்றி தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர். இந்த போட்டியில் ஆட்டநாயகன் விருது 5 விக்கெட்களை வீழ்த்திய முகமது ஷமிக்கு வழங்கப்பட்டது.