‘ஆபரேஷன் அஜய்’ திட்டத்தின் கீழ் இஸ்ரேலில் இருந்து 141 இந்தியர்கள் மற்றும் 2 நேபாளிகளை அழைத்துக் கொண்டு 6-வது சிறப்பு விமானம் டெல்லி வந்துள்ளது.
காசா பகுதியை சேர்ந்த ஹமாஸ் தீவிரவாதிகள் கடந்த 7-ம் தேதி இஸ்ரேலின் தெற்கு பகுதி நகரங்களில் திடீர் தாக்குதல் நடத்தினர். இதனால் இஸ்ரேல் ஹமாஸ் இடையே போர் மூண்டது. இந்தப் போர் 15வது நாளை எட்டிய நிலையில் தொடந்து நடைப்பெற்று வருகிறது.
இந்த சூழலில் இஸ்ரேலில் சிக்கியிருக்கும் இந்தியர்களை மீட்க மத்திய அரசு, ஆபரேஷன் அஜய் எனும் திட்டத்தை செயல்படுத்த தொடங்கியது. கடைசியாக கடந்த 17ம் தேதியன்று இந்த 5வது சிறப்பு விமானம் இஸ்ரேலிலிருந்து 286 இந்தியர்கள், 18 நேபாளிகளை ஏற்றிக்கொண்டு டெல்லி வந்து சேர்ந்தது.
இந்நிலையில் “6வது ஆபரேஷன் அஜய் விமானம் டெல்லியில் தரையிறங்கியது. 2 நேபாள குடிமக்கள் உட்பட 143 பயணிகள் இந்த விமானத்தில் வந்துள்ளனர். இவர்களை தேசியக் கொடி வழங்கி மத்திய இணை அமைச்சர் ஃபாகன் சிங் குலஸ்தே வரவேற்றார்.
தங்களை பாதுகாப்பாக யுத்த பூமியில் இருந்து அழைத்து வந்த மத்திய அதக்கு தாயகம் திரும்பிய இந்தியர்கள், நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தனர்.
இதுவரை 6 சிறப்பு விமானங்கள் மூலமாக மொத்தம் 1200 இந்தியர்கள் இஸ்ரேலில் இருந்து டெல்லி அழைத்துவரப்பட்டுள்ளனர்.