நவராத்திரி விழா: காஷ்மீர் வைஷ்ணவ தேவி கோவிலில் குவிந்த பக்தர்கள்!
Sep 6, 2026, 06:58 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நவராத்திரி விழா: காஷ்மீர் வைஷ்ணவ தேவி கோவிலில் குவிந்த பக்தர்கள்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 23, 2023, 12:15 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

நவராத்திரி விழாவின் நிறைவு நாள் இன்று கொண்டாடப்பட உள்ள நிலையில், ஜம்மு காஷ்மீர் மாநிலம் கத்ராவில் உள்ள ஸ்ரீமாதா வைஷ்ணவ தேவி கோவிலில் துர்கா தேவியை தரிசனம் செய்வதற்காக ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.

நவராத்திரி விழா, பெண் தெய்வமான துர்கா தேவியின் 9 வடிவங்களையும் வைத்து, 9 நாட்கள் நடைபெறும் விழாவாகும். நிறைவு நாளான 9-ம் நாள், மாகா நவமி என்று அழைக்கப்படுகிறது. அதாவது, நவராத்திரி விழாவின் மிகவும் புனிதமான நாட்களில் ‘மகா நவமி’யும் ஒன்று. இது துர்கா தேவி ‘மகிஷாசுரன்’ என்ற அரக்கனை வென்றதைக் குறிக்கிறது. இது ‘மா’ துர்க்கையின் வடிவங்களில் ஒன்றான ‘சித்திதாத்ரி’ தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்டிருக்கிறது.

ஆகவே, இவ்விழா நாடு முழுவதும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், துர்கா தேவியின் வடிவங்களில் ஒன்றான வைஷ்ணவ தேவிக்கு ஜம்மு காஷ்மீர் மாநிலம் கத்ராவில் கோவில் அமைந்திருக்கிறது. இது இந்து யாத்ரீகர்களுக்கான மிகவும் புனிதமான தலங்களில் ஒன்றாகத் திகழ்ந்து வருகிறது. ஆகவே, இக்கோவிலில் நவராத்திரி விழா களைகட்டும். குறிப்பாக, விழாவின் நிறைவுநாளான மகா நவமியன்று இக்கோவிலுக்கு நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள்.

அந்த வகையில், 9-வது நாளான இன்று வைஷ்ணவ தேவியை தரிசிக்க காலையிலேயே ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். பின்னர், நீண்ட வரிசையில் காத்திருந்து தேவியை தரிசித்தனர். முன்னதாக, ‘மகா அஷ்டமி’ விழாவான நேற்று, ஜம்மு காஷ்மீர் மாநில ஆளுநர் லெப்டினன்ட் கவர்னர் மனோஜ் சின்ஹா, ​​ஸ்ரீமாதா வைஷ்ணோ தேவி கோவிலில் தரிசனம் செய்து, ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் அமைதி, செழிப்பு மற்றும் முன்னேற்றத்திற்காக பிரார்த்தனை செய்தார்.

தொடர்ந்து, ஆலய வாரியத்தின் இணையதளத்தில் ‘நேரடி தரிசன வசதி’ மற்றும் இருமொழி சார்ட்போர்டை பக்தர்களுக்கு அறிமுகப்படுத்தினார். மேலும், மாதா வைஷ்ணவ தேவி புனித யாத்திரை பற்றி, ரூபா பப்ளிகேஷன்ஸ் வெளியிட்டுள்ள ‘தி பக்தி ஆஃப் ஷக்தி’ என்கிற யாத்திரை வழிகாட்டி புத்தகத்தையும் வெளியிட்டார்.

இதேபோல, நவராத்திரி விழாவின் நிறைவு நாளான ‘மகா நவமி’யை முன்னிட்டு, அஸ்ஸாம் மாநிலம் கௌகாத்தியில் உள்ள காமாக்யா தேவி கோவிலிலும் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். மேலும், தலைநகர் டெல்லியிலுள்ள ஜாண்டேவாலன் கோவில், சத்தர்பூர் கோவில் ஆகிய கோவில்களில் நடந்த காலை ஆரத்தியில் ஏராளமான பக்தர்கள் வரிசையில் காத்திருந்து தேவியை தரிசனம் செய்தனர்.

இது தவிர, மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள மும்பா தேவி கோவிலிலும் அதிகாலை ‘ஆரத்தி’ நடைபெற்றது. இந்நிகழ்ச்சியிலும் ஏராளமான பக்தர்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டு தேவியை தரிசித்தனர்.

Tags: jammu kashmirvaishno devi templeMaha navamiDevotees
Share
Tweet
SendShare
Previous Post

‘ஆபரேஷன் அஜய்’ திட்டத்தின் கீழ் இஸ்ரேலில் இருந்து 143 இந்தியர்கள் டெல்லி வருகை!

Next Post

பதக்க வேட்டையை தொடங்கிய இந்தியா !

Related News

கும்மிடிப்பூண்டி அருகே அரசு மருத்துவமனை வளாகத்தில் மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழப்பு!

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக லஞ்ச ஒழிப்பு துறை சோதனை – கே.என்.நேரு

பாகிஸ்தான் அத்துமீறினால் அந்நாட்டு எல்லைக்குள் நுழைந்து தாக்குதல் – பிரதமர் மோடி எச்சரிக்கை!

கே.என் நேரு வீட்டில் சிக்கியது என்ன ?; தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை அறிக்கை

‘Made-in-India’- வரலாற்று சாதனை : செவ்வாய் கிரகத்தில் விண்வெளி வீரர்கள் வசிக்க வீடு ரெடி – சிறப்பு தொகுப்பு!

சீன எல்லையில் Early-warning system : மீண்டும் சீரமைக்க நேபாள அரசு தீவிரம் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

அவிநாசியில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய முதல் நிலை ஒப்பந்ததாரர் வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை!

வேளச்சேரி தொகுதி காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ அசன் மவுலானா, தேர்தலில் போட்டியிட 3 ஆண்டுகள் தடை – தேர்தல் ஆணையம்

அரசியல் காரணங்களுக்காக கே.என். நேரு தொடர்புடைய இடங்களில் சோதனை – மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!

கேரளாவில் கார் விபத்து – திண்டுக்கல் கல்லூரி மாணவர்கள் 7 பேர் பலி!

ஜவ்வாது மலையில், அரசு வன நிலத்தை பட்டா செய்து தருவதாகக் கூறி ஒரு கோடி லஞ்சம் – 6 பேர் சஸ்பெண்ட்!

ஆர்எஸ்எஸ் தலைவரின் இங்கிலாந்து பயணம் இந்தியாவின் கலாச்சார கண்ணோட்டம் குறித்த சிறந்த புரிதலை வளர்க்கும்  – சுனில் அம்பேகர்

கே.என். நேரு தொடர்புடைய 19 இடங்களில் லஞ்ச ஒழிப்புதுறை சோதனை – சகோதரர் வீட்டிலும் ரெய்டு!

போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரம் – ஏர் இந்தியா விமானி பணிநீக்கம்!

கும்பகோணத்தில் மதுபானம் வாங்க 2 கி.மீ. தூரம் காத்திருந்த மதுப்பிரியர்கள்!

விக்கிரவாண்டி – சேத்தியாத்தோப்பு நான்கு வழிச்சாலை பணிகள் எப்போது முடியும்? – தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் பதில்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies