ஒரேப் போட்டியில் தங்கம், வெள்ளி, வெண்கலம் என அனைத்து பதக்கத்தையும் வென்ற இந்தியா.
சீனாவில் நடந்து வரும் ‘பாரா’ ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா பதக்க வேட்டையை தொடங்கி உள்ளது.
சீனாவின் ஹாங்சோ நகரில் மாற்றுத்திறனாளிகளுக்கான ‘பாரா’ ஆசிய விளையாட்டு போட்டி நேற்று கோலாகலமாக தொடங்கியது. இந்த விளையாட்டுப் போட்டிகள் அக்டோபர் 28 தேதி வரை நடைபெறும்.
இதில் 4 நாடுகளை சேர்ந்த, 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் 22 வகையான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கின்றனர். இப்போட்டில் இந்தியாவில் இருந்து 191 வீரர்கள், 112 வீராங்கனைகள் என மொத்தம் 303 பேர் கலந்துக் கொண்டுள்ளனர்.
இந்நிலையில், பாரா ஆசியப் போட்டியில் இந்தியாவின் பதக்க வேட்டையைத் தொடங்கியுள்ளது. ஆடவர் உயரம் தாண்டுதல் பிரிவில் சைலேஷ் குமார் தங்கம் பதக்கம் வென்றுள்ளார்.
இவரைத் தொடர்ந்து, தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு வெள்ளி பதக்கமும், ராம் சிங் வெண்கல பதக்கமும் வென்றுள்ளனர்.
ஒரே போட்டியில் மூன்று பதக்கங்களையும் வென்று இந்தியா அசதியுள்ளது. மேலும் இந்த விளையாட்டுப் போட்டியில் இந்திய 100 பதக்கங்கள் வெல்லும் என்பதே இரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.