திட்டமிட்டு தாக்குதல் நடத்தும் சீனா: பிலிப்பைன்ஸ் குற்றச்சாட்டு!
Mar 15, 2026, 08:22 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திட்டமிட்டு தாக்குதல் நடத்தும் சீனா: பிலிப்பைன்ஸ் குற்றச்சாட்டு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 23, 2023, 02:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வட சீனக் கடல் பகுதியில் நிலைநிறுத்தப்பட்டிருக்கும் தங்களது நாட்டு கப்பல்கள் மீது சீனா திட்டமிட்டு தாக்குதல் நடத்துவதாக பிலிப்பைன்ஸ் குற்றம்சாட்டி இருக்கிறது.

மேற்கு பசிபிக் கடலில் கடல்வழி போக்குவரத்திற்கு மிகவும் முக்கியமான இடமாக வட சீனக் கடல் பகுதி கருதப்படுகிறது. இந்த கடற்பகுதி வழியாகத்தான் உலகின் 21 சதவீதத்திற்கும் அதிகமான உலக வர்த்தகக் கப்பல் போக்குவரத்து கையாளப்படுகிறது என்று ஐ.நா. தெரிவித்திருக்கிறது. அதேபோல, வட சீனக் கடல் பகுதியில்தான் மீன் வளமும் அதிகம் உள்ளது. எனவே, உலகின் 50 சதவீத மீன்பிடிக் கப்பல்கள் இங்கு நிலைநிறுத்தப்படுவது வழக்கம்.

மேலும், வட சீனக் கடல் பகுதி நீர்மட்டம் குறைவான கடல் பகுதியாகும். இப்பகுதி மீது சீனாவும், பிலிப்பைன்ஸும் உரிமை கொண்டாடி வருகின்றன. எனவே. இது சர்ச்சைக்குரிய பகுதியாகக் கருதப்படுகிறது. எனினும், இப்பகுதியில்தான் பிலிப்பைன்ஸ் தனது நாட்டுக் கப்பல்களை நிலைநிறுத்தும். இக்கப்பல்களுக்குத் தேவையான மாதாந்திர அத்தியாவசியப் பொருட்கள், பிலிப்பைன்ஸ் நாட்டிலிருந்து சிறிய படகுகளில் கொண்டு செல்லப்படுகிறது.

இந்த நிலையில், தாமஸ் ஷோல் பகுதி அருகே நிலைநிறுத்தப்பட்டிருந்த பிலிப்பைன்ஸ் இராணுவக் கப்பல் மீதும், அதனை நோக்கிச் சென்று கொண்டிருந்த கடற்படைக்குச் சொந்தமான ஒரு வினியோகப் படகு மீதும், தங்களது எல்லைக்குள் வந்ததாகக் கூறி, சீனக் கடற்படை கப்பல்கள் மோதி தாக்கி இருக்கிறது. இதில் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து தகவல்கள் வெளியாகவில்லை. இது சீனாவால் திட்டமிடப்பட்ட தாக்குதல் என்று பிலிப்பைன்ஸ் குற்றம்சாட்டி இருக்கிறது.

இதுகுறித்து பிலிப்பைன்ஸ் தரப்பில் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில், “எங்கள் நாட்டு கடல்வழி போக்குவரத்தை சீனா தடுக்க நினைக்கிறது. இதற்காக, அந்நாடு ஆபத்தான வழிமுறைகளை கையாண்டு வருகிறது. இதனால் கடல் பயணம் மேற்கொள்ளும் எங்கள் நாட்டினரின் உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது” என்று தெரிவித்திருக்கிறது. எனினும், இதனை மறுத்திருக்கும் சீனா, “பிலிப்பைன்ஸ் வேண்டுமென்றே சர்ச்சையை கிளப்புகிறது” என்று தெரிவித்திருக்கிறது.

இது ஒருபுறம் இருக்க, இக்கடல் பகுதியில் பிலிப்பைன்ஸ் தவிர, வியட்னாம், தைவான், மலேசியா மற்றும் புரூனே ஆகிய நாடுகளின் பல பகுதிகளுக்கும் சீனா உரிமை கொண்டாடி வருகிறது. இதனால், அந்நாடுகள் சீனாவுடன் சுமூக உறவில்லாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags: chinashipPhilippines
ShareTweetSendShare
Previous Post

18 மணி நேரத்தில் புயல் – மக்களே எச்சரிக்கை!

Next Post

பாகிஸ்தான் vs ஆப்கானிஸ்தான் : வெல்லப்போவது யார் ?

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies