ஒரு நாள் உலகக்கோப்பைத் தொடர் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்றையப் போட்டி பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையே சென்னை எம்.ஏ சிதம்பரம் மைதானத்தில் நடைபெறுகிறது.
11 வருடங்களுக்கு பின்னர் பாகிஸ்தான் அணி தற்போது சென்னையில் விளையாடுகிறது. கடைசியாக பாகிஸ்தான் 2012 ஆம் ஆண்டு சென்னை மைதானத்தில் விளையாடியது.
இந்நிலையில் இன்று நடைபெறும் போட்டி இரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை பெற்றுள்ளது. இந்தப் போட்டிக்கு பல இந்திய இரசிகர்கள் இந்திய அணியின் நீல நிற டீ – சட்டையை அணிந்து கொண்டும், சிலர் பாகிஸ்தான் வீரர் பாபர் ஆசாமின் பெயர் எழுதப்பட்ட டீ – சட்டையை அணிந்துக் கொண்டும் உற்சாகமாக மைதானத்திற்கு செல்கின்றனர்.
மேலும் இரசிகர்களிடம் யாருக்கு ஆதரவு தெரிவிப்பீர்கள் என்று கேட்டதற்கு பலரும் நல்ல கிரிக்கெட்டை ஆதரிப்போம் என்று கூறியுள்ளார்.