பாகிஸ்தானின் முன்னணி தீவிரவாதியும், லக்ஷர் இ தொய்பா தளபதியுமான ஹஷிம் அலி அக்ரம் காஸாவில் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
கடந்த 7-ம் தேதி காஸாவின் ஹமாஸ் தீவிரவாதிகள் இஸ்ரேல் மீது கொடூரத் தாக்குதலை அரங்கேற்றினர். சுமார் அரை மணி நேரத்திற்குள் 7,000 ஏவுகணைகளை செலுத்தி இஸ்ரேலை நிலைகுலையச் செய்தது. எனினும், சுதாரித்துக் கொண்ட இஸ்ரேல், அசுரத்தனமான பதிலடித் தாக்குதலை நடத்தி வருகிறது. ஹமாஸ் தாக்குதலில் 1,400 இஸ்ரேலியர்கள் உயிரிழந்த நிலையில், இஸ்ரேல் தாக்குதலில் 4,500-க்கும் மேற்பட்ட காஸாவைச் சேர்ந்த பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.
அதேசமயம், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தும் அளவுக்கு ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு ஆள் பலமும், ஆயுத பலமும் கிடையாது. ஆகவே, ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு யாராவது உதவி இருக்க வேண்டும் என்கிற சந்தேகம் எழுந்தது. ஈரான் நாட்டின் அமோக ஆதரவு இருப்பதால், அந்நாடு நிச்சயமாக ஆயுத உதவிகளை வழங்கி இருக்கலாம் என்கிற தகவல்கள் வெளியாகின. மேலும், ஈரானுடன் நட்பு பாராட்டும் ரஷ்யாவும் ஆயுத சப்ளை செய்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், லஷ்கர் இ தொய்பா தீவிரவாதக் குழுக்களும் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு உதவி இருப்பது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. இதை மெய்ப்பிக்கும் வகையில், பாகிஸ்தான் நாட்டின் முன்னணித் தீவிரவாதியும், லஷ்கர் இ தொய்பா தளபதியுமான ஹஷிம் அலி அக்ரம் காஸாவில் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார். இஸ்ரேல் இராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதல் இருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முயன்றிருக்கிறார்.
அப்போது, காஸாவில் அடையாளம் தெரியாத நபர்களால் ஹஷிம் அலி சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார். இத்தகவலை டைம்ஸ் அல்ஜீப்ரா செய்திச் சேனல் உறுதிப்படுத்தி இருக்கிறது. லக்ஷர் இ தொய்பாவின் இணை நிறுவனரான ஹபீஸ் சயீத்துக்கு நெருக்கமானவராக அறியப்படும் ஹஷிம் அலி அக்ரம் மறைவு, அத்தீவிரவாத அமைப்புக்கு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.
காஸாவின் ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவாக லஷ்கர் இ தொய்பா மற்றும் ஜெய்ஷ் இ முகமது அமைப்பினர் பாகிஸ்தானில் பொதுக்கூட்டம் நடத்தி வரும் நிலையில், ஹஷிம் அலி அக்ரம் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கும் தகவல், அந்த அமைப்பினரிடையை கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.