போலியோ என்று அறியப்படும் போலியோமைலிடிஸ், ஒரு நரம்புத்தசைக் குறைபாடு ஆகும். பிக்கோர்னாவிரிடே குடும்பத்தைச் சார்ந்த ஒரு வைரஸ் இதற்கு காரணமாகும். இது பெரும்பாலும் ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளை பாதிக்கிறது.
அக்டோபர் 24ஆம் தேதி உலக போலியோ தினம் கடைபிடிக்கப்படுகிறது, இந்த நோய்க்கு தமிழில் இளம்பிள்ளைவாதம் என்று பெயர். போலியோ இல்லாத உலகத்தை நோக்கிய உலகளாவிய முயற்சிகளை எடுத்துக்காட்டும் நாளாக இந்த நாள் இருக்கிறது.
உலகின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் போலியோ வைரஸை ஒழிப்பதற்கான போராட்டத்தில் முன்னணியில் இருப்பவர்களின் பங்களிப்புகளையும் இந்த நாள் மதிக்கிறது.
பொதுவாக போலியோ என அழைக்கப்படும் போலியோமைலிடிஸைக் கட்டுப்படுத்த பாதுகாப்பான மற்றும் பயனுள்ள தடுப்பூசிகளைப் பரவலாகப் பயன்படுத்துவதையும் இந்த நாள் ஊக்குவிக்கிறது.
பெரியம்மை நோய்க்குப் பிறகு முற்றிலுமாக ஒழிக்கப்படும் இரண்டாவது மனித நோயாக இது மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இந்த நாளில் போலியோ பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி போலியோ வராமல் தடுக்கும் வழிமுறைகளை செய்வோம்.