சென்னை விமான நிலையத்தில் 2.4 கிலோ தங்கம் பறிமுதல்!
Nov 17, 2025, 05:41 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சென்னை விமான நிலையத்தில் 2.4 கிலோ தங்கம் பறிமுதல்!

Web Desk by Web Desk
Oct 24, 2023, 01:02 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

விமானத்தில் கடத்தி வரப்பட்ட, 1.5 கோடி ரூபாய் மதிப்புள்ள, 2.4 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

ஐக்கிய அரபு நாடுகளின் தலைநகரான அபுதாபியில் இருந்து, இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் நேற்று காலை சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அந்த விமானம் மீண்டும் உள்நாட்டு விமானமாக, காலை 10 மணிக்கு, சென்னையில் இருந்து ஹைதராபாத் புறப்பட்டுச் செல்ல இருந்தது. அதற்கு முன்பாக, விமான நிலைய ஊழியர்கள் அந்த விமானத்தைச் சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். அப்போது விமானத்தின் கழிவறை தண்ணீர் தொட்டியில் பார்சல் இருப்பதைப் பார்த்துள்ளனர்.

இதுகுறித்து ஊழியர்கள், சென்னை விமான நிலைய மேலாளருக்குத் தகவல் தெரிவித்தனர். அந்த பார்சலை பிரித்துப் பார்த்து போது, அதில் 2.4 கிலோ தங்கக்கட்டிகள் இருந்தன. இதன் சர்வதேச மதிப்பு, 1.5 கோடி ரூபாய். விமானத்தின் கழிவறைத் தொட்டியில் கைப்பற்றப்பட்ட தங்கக் கட்டிகள், சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதன் முதற்கட்ட விசாரணையில், அபுதாபியில் இருந்து தங்கத்தைக் கடத்தி வந்த மர்ம நபர், தங்கத்தை விமானத்தில் உள்ள கழிவறை தண்ணீர் தொட்டியில் மறைத்து வைத்துவிட்டு, கீழே இறங்கி வெளியில் சென்று உள்ளார்.

அதே கடத்தல் கும்பலைச் சேர்ந்த மற்றொரு மர்ம நபர், இந்த விமானத்தில் ஹைதராபாத் செல்வதற்கு உள்நாட்டுப் பயணிகள் விமான டிக்கெட் எடுத்து, இந்த விமானத்தில் பயணித்து, ஹைதராபாத் சென்றதும், இந்த தங்கக் கட்டியை எடுத்துவிட்டு வெளியில் செல்ல திட்டமிட்டு இருக்கிறார் என்பது தெரியவந்துள்ளது.

விமான நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளைக் கொண்டு, கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்களை அதிகாரிகள் தேடி வருகின்றனர்.

Tags: chennai airport2.4 kg of gold confiscated!
ShareTweetSendShare
Previous Post

பிரதமர் மோடி விஜயதசமி வாழ்த்து!

Next Post

பாரா ஆசிய விளையாட்டு : தங்க வேட்டையில் இந்தியா !

Related News

துபாய் விமான கண்காட்சி – ஏராளமான நிறுவனங்கள் பங்கேற்பு!

கேரளா : பாலத்தின் இடைவெளியில் சிக்கி அந்தரத்தில் தொங்கிய கார்!

பாகிஸ்தான் அரசு பயங்கரவாதத்தை ஆதரிக்கிறது – ராணுவ தளபதி உபேந்திர திவேதி

பிரான்ஸில் தொடங்கியது ‘கருடா’ வான் பாதுகாப்பு பயிற்சி!

வாணியம்பாடி அருகே பள்ளிவாசலில் பயில வந்த மாணவர்களை சரமாரியாகத் தாக்கிய ஆசிரியர்!

உயிரிழந்த தந்தையின் உடலை அடக்கம் செய்ய முடியாமல் குழந்தைகள் தவிப்பு – உதவிய கிராம மக்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

கும்பகோணம் : திருபுவனம் நெசவாளர்கள் காவடி எடுத்து பாதயாத்திரை!

1,200 பேரை விடுவிக்க இலக்கு – உக்ரைன் அதிபர்

குண்டுவீச்சு பாணியில் சீன போர் விமானங்கள் ரோந்து!

சவுதி அரேபியா : வெளுத்து ஆலங்கட்டி மழை பனி போல் காட்சி!

தோல்வி பயத்தில் எஸ்ஐஆர் நடைமுறையைத் திமுக எதிர்க்கிறது – தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன்

தஞ்சாவூர் : மதுப்பிரியரை கன்னத்தில் மாறி மாறி அறைந்த டாஸ்மாக் விற்பனையாளர்!

இயற்கையாலும் தாக்குதலுக்கு உள்ளாகும் காசா – மக்கள் பாதிப்பு!

ஜப்பான் பிரதமருக்கு சீனா மிரட்டல்!

பழனி மலையடிவாரத்தில் கடை அமைப்பது தொடர்பாக தகராறு : பெண் கன்னத்தில் தாக்கிய திமுக பிரமுகர்!

சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies