மைசூரு தசரா விழா: குவிந்த சுற்றுலாப் பயணிகள்... ஜொலிக்கும் அரண்மனை!
Mar 19, 2026, 03:54 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மைசூரு தசரா விழா: குவிந்த சுற்றுலாப் பயணிகள்… ஜொலிக்கும் அரண்மனை!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 24, 2023, 02:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மைசூரு தசரா விழாவைக் காண, லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குவிந்திருக்கிறார்கள். மேலும், விழாவை முன்னிட்டு மைசூரு அரண்மனை கலர்கலரான மின்விளக்குகள் அலங்காரத்தில் ஜொலிக்கிறது.

நவராத்திரி திருவிழாவும், தசரா பண்டிகையும் இந்தியா முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டாலும், மைசூரில் நடக்கும் தசரா விழாவைப்போல வேறெங்கும் அவ்வளவு வண்ணமயமாக இருப்பதில்லை. கலை, கலாசாரம், பண்பாட்டை பிரதிபலிக்கும் வகையில், மன்னர் காலம் தொட்டு கொண்டாடப்படும் மைசூரு தசரா விழா உலக அளவில் புகழ்பெற்று விளங்குகிறது.

இந்த விழா, நவராத்திரியின் முதல் நாளன்று தொடங்கி, விஜயதசமி தினம் வரை நடைபெறுகிறது. வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த தசரா விழா 413 ஆண்டுகளை நிறைவுசெய்து, 414-வது ஆண்டாக இந்த ஆண்டு கொண்டாடப்படுகிறது. கடந்த 15-ம் தேதி தொடங்கிய இந்த தசரா விழாவை முன்னிட்டு, மைசூரு நகரம், அரண்மனை முழுவதும் மின்விளக்கு அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளன.

மேலும், இளைஞர் தசரா, உணவு மேளா, தசரா கண்காட்சி, மலர் கண்காட்சி திரைப்பட விழா, குழந்தைகள் தசரா உள்ளிட்டவை வழக்கமான கொண்டாட்டத்துடன் நடந்தது. இதற்கிடையே, மைசூரு அரண்மனையிலும் பாரம்பரியம், கலாசார முறைப்படி தசரா விழா மற்றும் நவராத்திரி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இந்த பூஜைகள் அரண்மனை மன்னர் யதுவீர் தலைமையில் தொடங்கியது. தொடர்ந்து அரண்மனை வளாகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

நவராத்திரி விழா, தசரா விழாவையொட்டி, மன்னர் யதுவீர் தர்பார் நடத்துவதற்காக தங்க, வைர, நவரத்தினங்களால் செய்யப்பட்ட சிம்மாசனம் ஜோடிக்கப்பட்டது. பின்னர், அந்த சிம்மாசனத்துக்கு அரண்மனை முறைப்படி பூஜைகள் செய்யப்பட்டது. தொடர்ந்து, மன்னர் யதுவீர் ராஜ உடையில் வீரநடைபோட்டு தர்பாருக்கு வந்து சிம்மாசனத்தில் அமர்ந்து பூஜைகள் நிறைவேற்றப்பட்டன.

இதைத் தொடர்ந்து, இன்று மாலை ஜம்பு சவாரி ஊர்வலம் நடைபெற உள்ளது. இதற்காக யானைகள் அனைத்தும் அலங்கரிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளன. 750 கிலோ எடை கொண்ட தங்க அம்பாரியில் சாமுண்டீஸ்வரி அம்மன் எழுந்தருளியதும், தங்க அம்பாரியை சுமந்து கொண்டு அபிமன்யூ என்ற யானை தலைமையில் 14 யானைகள் மைசூரு நகரின் முக்கியச் சாலைகள் வழியாக ஊர்வலமாக மண்டபம் வரை சென்றடையும்.

பின்னர், விளையாட்டு மைதானத்தில் சாகச நிகழ்ச்சிகள் உள்ளிட்ட இதர நிகழ்ச்சிகள் நடக்கும். இந்த விழாவை காண மைசூருவில் லட்சக்கணக்கானோர் குவிந்துள்ளனர். சிறப்பு பேருந்துகள் மற்றும் சிறப்பு எரயில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்பு பணியில் 3,000-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் ஈடுபட்டிருக்கிறார்கள்.

Tags: MysoreDasara Festival
ShareTweetSendShare
Previous Post

மாவீரர்கள் மருது சகோதரர்கள் நினைவு தினம் இன்று!

Next Post

திருப்பதி கோவில் பிரம்மோற்சவ விழா நிறைவு – ரூ.47.56 கோடி உண்டியல் வசூல்!

Related News

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று வருகிறது – நயினார் நாகேந்திரன்

விளாத்திக்குளம் மாணவி கொலை வழக்கு – முக்கிய நபர் கைது!

தர்ம முனீஸ்வரன் கைது – அடுக்கடுக்கான கேள்வி எழுப்பிய அண்ணாமலை!

அமெரிக்க வான்பரப்பில் டிரோன்கள் பறந்ததாக தகவல் – உச்சகட்ட பாதுகாப்பு!

கோயிலில் கந்த சஷ்டி கவசம் கல்வெட்டு பேப்பர் மூலம் மறைப்பு – இந்து முன்னணி போராட்டம்!

திமுக எம்.எல்.ஏ. அன்னியூர் சிவாவுக்கு எதிராக சிபிஐ விசாரணை – உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!

Load More

அண்மைச் செய்திகள்

செங்கல்பட்டு அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு – திமுக நிர்வாகியை தேடுகிறது போலீஸ்!

புற்றுநோய், இதய பாதிப்புக்கான உயர்ரக மருந்துகள் அரசு மருத்துவமனைகளில் இல்லை என புகார் – நோயாளிகள் அவதி!

இன்றைய தங்கம் விலை!

ஆலங்குளம் அருகே ஜல் ஜீவன் திட்ட முறைகேடு – பஞ்சாயத்து தலைவரை பதவி நீக்கம் செய்ய பொதுமக்கள் வலியுறுத்தல்!

தமிழகத்தில் சாலை அமைக்காமல் ரூ. 600 கோடி அளவுக்கு செலவு கணக்கு காட்டப்பட்டுள்ளதாக புகார்!

சேலம் மாவட்ட திட்ட அலுவலர் அலுவலகத்தில் 2,604 செல்போன்கள் – தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார்!

கர்நாடகாவின் தார்வாட் மாவட்டத்தில் ஆலங்கட்டி மழை!

சங்கரன்கோவில், தேனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை!

மாற்றுத் திறனாளிகளுக்கு 7 % இடஒதுக்கீடு வழங்க சட்டம் கொண்டுவர உத்தரவிடக் கோரிய வழக்கு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் தீப வழக்கை நானே விசாரிப்பேன் – நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies