இன்றைய உலகக்கோப்பைப் போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. அதில் இன்றையப் போட்டி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் தென் ஆப்பிரிக்கா மற்றும் வங்கதேசம் அணிகளுக்கு இடையே நடைபெறுகிறது.
இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பேட்டிங்யை தேர்வு செய்திருக்கிறது. தற்போது தென் ஆப்பிரிக்கா அணியின் தொடக்க வீரர்கள் குயின்டன் டி காக் மற்றும் ரீசா ஹென்ட்ரிக்ஸ் விளையாடிவருகின்றனர்.
தென் ஆப்பிரிக்கா அணியின் வீரர்கள் :
குயின்டன் டி காக் , ரீசா ஹென்ட்ரிக்ஸ், ராஸ்ஸி வான் டெர் டுசென், ஐடன் மார்க்ரம் (தலைவர்), ஹென்ரிச் கிளாசென், டேவிட் மில்லர், மார்கோ ஜான்சன், ஜெரால்ட் கோட்ஸி, கேசவ் மகாராஜ், ககிசோ ரபாடா, லிசாட் வில்லியம்ஸ்.
வங்காளதேச அணியின் வீரர்கள் :
தன்சித் ஹசன், லிட்டன் தாஸ், நஜ்முல் ஹொசைன் சாண்டோ, ஷாகிப் அல் ஹசன் (தலைவர்), மெஹிதி ஹசன் மிராஸ், முஷ்பிகுர் ரஹீம் , மஹ்முதுல்லா, நசும் அகமது, முஸ்தாபிசுர் ரஹ்மான், ஷோரிபுல் இஸ்லாம், ஹசன் மஹ்முத்.